வெற்றிகரமான தோல்வி

ஏன்டா முதல் வரிசையில உக்காந்து என்னடா ரண்டு பேரும் குசுகுசுன்னு பேசறீங்க?
==++
அய்யா இவன் வீட்டிலே அதிகமாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாக்கிறான் போல இருக்குதுங்க.
+=+
அதை எப்பிடீடா கண்டுபிடிச்ச?
==+×+
காலைல வகுப்புக்கு வந்ததிலிருந்து "வெற்றிகரமான தோல்வி" ன்னா என்னன்னு கேட்டு என்ன நச்சரிக்கிறான் அய்யா.
##+××
சரி உன்னோட வயசு என்னடா?
==+×
உன்னோட அண்ணன் கோமகன் இப்ப என்ன செய்யறான்?
####
அய்யா, அவன் தனியார் மருத்துவக் கல்லூரில ஏழு வருசமாப் படிச்சிட்டு இருக்கிறான்.
==++
அஞ்சரை வருசத்தில படிச்சு தேர்வு எழுதி பட்டம் வாங்கவேண்டியவன் ஏழு வருசமாப் படிக்கிறான். அதுக்கு என்னடா அர்த்தம்?
==+++×
விழுந்து விழுந்து படிச்சாலும் அவனால தேர்வில வெற்றிபெற முடியவில்லை அய்யா.
==++
இருந்தாலும் அவன் முயற்சியைக் கைவிடாது படிச்சே இருக்கிறான். ஒவ்வொரு தாளையும் இரண்டு அல்லது மூன்று தடவை எழுதித் தேர்ச்சி பெறுகிறான். தோல்வியிலும் மனம் தளராம
தேர்ச்சிபெறவேண்டும் என்ற நோக்கத்தில் படிக்கிறானே அதுதான்டா வெற்றிகரமான தோல்வி.
==××
ரொம்ப நன்றீங்க அய்யா. இதைப் போய் அரைமருத்துவன் எங்க அண்ணங்கிட்டச் சொன்னா ரொம்ப சந்தோசப்படுவான் அய்யா.

எழுதியவர் : மலர் (15-Dec-18, 12:54 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 209

மேலே