மன இறுக்கம்

எந்த ஒரு செயலையும் செய்யத் தெரியாமல் இருப்பதை விட உயிரை விடுதலே மேல் என்பார்கள் சிலர். அது தவறான கருத்தாகும்.எந்த ஒரு மனிதனும் செயல்பட தெரியாதவனாக இருக்க மாட்டான் ,அவன் செய்ய வேண்டிய செயலை அவன் விரும்பிய முறையில் செய்ய முடியவில்லையே என்று தான் செயலற்றவனை இருப்பான்.இது தான் நடைமுறையில் உண்மை .பெரும்பாலாக மாத ஊதியம் பெரும் ஒருவரிடம்,இந்த சன்மானத்தை முழு அர்பணிப்போடுதான் பெற்றுக் கொண்டாயா என கேட்டால் அவர் இல்லை என்று தான் பதில் கூறுவார்.காரணம் அவர் விரும்பியபடி செயல்பட முடியாமல் ஒரு இயந்திரத்தைப் போல் செயல்பட்டுத்தான் அது கிடைக்கப் பெற்றது என்பர்.எந்த ஒரு செயலையும் செய்த பின் காலம் தான் அதற்கு பதில் சொல்லும் என்பர் .ஆனால் காலத்தால் உணர்த்த முடியாத தகவல்களையும் காவியம் தான் சொல்லும்.எந்த ஒரு செயலையும் அது எப்படி நடந்தது என்று மற்றவரிடம் தெரிவிக்காத வரையில் அந்த தகவலை யாராலும் முழுமையாக பெற முடியாது .அப்படி தெரிவிக்க இயலாதவர்கள் நடந்தவற்றை இப்படி காவியங்களாக படைத்தால் மற்றவர் எளிதில் உணர்ந்து கொள்வார்கள்.இயற்கையின் செயல்களையும்,மனிதனின் செயல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள் .இயற்கையின் சீற்றம் பேராபத்தானது தான்,ஆனால் அது நடந்தவற்றுக்கு காரணம் ஒரு மனிதனின் செயலாகத்தான் இருக்கும்.ஒரு பழமொழியை நினைவு கூறுங்கள் ,நாலு பேர் நல்லவர்கள் இருப்பதினால் தான் மழை இன்னும் பெய்கிறது என்று.இது மிகவும் உண்மையான கூற்று.நல்லவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்வதினால்,இயற்கையின் சீற்றம் அதிகரிப்பதாக கூறலாம் .இதைத் தான் அனைத்து சமய நெறிகளும் வலியுறுத்துகின்றன.மனிதனின் வாழ்க்கையில் நிகழ்காலங்களை விட பழங்காலங்களே மிகவும் சிறப்பானது.சிறப்பானது மட்டும் அல்ல பாதுகாப்பானதும் கூட.அப்படி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை தடங்களை நாம் ஒவ்வொரு நிலையிலும் நினைவு கூர்ந்தோமேயானால்,நம் வாழ்வில் நல்ல செயல்களும்,நம் சிந்தனையில் நல்ல எண்ணங்கள் மட்டுமே நிறைந்தவையாக இருக்கும்.அப்படிப் பட்ட வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசை தான்,அதை செயல்படுத்துவதில் தான் சிரமம் ஏற்படுகிறது.முயன்றால் முடியாதது உண்டோ!நாம் செயல் படுத்திக் காட்டுவோம்.
நன்றி !!!
அன்புடன் உங்களில் ஒருவன்
லிங்கு ராம்

எழுதியவர் : லிங்கு ராம் (15-Dec-18, 4:40 pm)
சேர்த்தது : லிங்கு ராம்
Tanglish : mana irukkam
பார்வை : 173

மேலே