கருவறையில் ஒரு கல்லறை

வானில் தேய்ந்த என்
வெண்ணிலா வளரவே இல்லை ...
வரண்டு போன என்
பூமியில் மழைத்துளி விழவேயில்லை..
வீட்டுச் சென்ற என்
தென்றல் வாசல் திரும்பவேயில்லை..
இதுதான் என்
விதியா புலப்படவேயில்லை..!!

இல்லாத வாசம் நானா
பார்வையற்றோர் கண்ட கனவுதானா
இறைவா இவன் நீ வேண்டாம் என்று
தூக்கி எரிந்த பொம்மை போல் இன்று ..

பூமிக்குள்ள புதைந்த விதைபோல,
நாட்களில் மறைந்த கதைபோல ,
தண்ணீரில் கறைந்த கண்ணீர் போல,
இவன் வாழ்க்கையோ வெறும் கனவு போல ….!!

எவர் கண்ணிலும் படாத
விண்மின் நானோ
வண்ணமில்லாமல் வரைந்த
ஓவியம் தானோ
சொன்ன சோகம் -இங்கு
கொஞ்சம்
மனதின் பாரம் அது
விண்ணை மிஞ்சும்
தோல்வியை சுமந்தே
மரத்துப்போனது இவனது நெஞ்சம் ..!!

துள்ளி திரிந்த நாட்கள்
மீண்டும் மலருமா ??
பள்ளி சென்ற காலங்கள்
அது திரும்புமோ ??
தாயின் கருவறையில்
ஓர் கல்லறையும் கிட்டுமோ??

ஏக்கத்தின் விளிம்பில்

என்றும்...என்றென்றும் ..
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (16-Dec-18, 7:33 am)
சேர்த்தது : Ever UR Jeevan...
பார்வை : 180

மேலே