ஞாபகம் AD=

காலை மணி 7:30

கையில் பால் பாக்கெட்டுடன் பெரியவர் ஒருவர் கார்த்தீபன் ஐபிஎஸ் என்று பெயரிடப்பட்டிருந்த வீட்டினுள் நுழைந்தார் கலைந்து கிடந்த மேசை பழைய புதிய பொருட்கள் என எல்லா திசையிலும் பொருட்கள் பரவி கிடந்தன. சுவரில் புதிய வண்ணம் பூசுவதற்கான சுரண்டல் தென்பட்டன பழைய புதிய புத்தகம் எல்லாம் சிதறி கிடந்தன.

சமையல் அறையில் நுழைந்தார் கார்த்திபன் என்ற பெரியவர் தான் வைத்திருந்த பால் பாக்கெட்டை ராமமூர்த்தியிடம் கொடுத்தால் என்ன ராமா இன்னைக்காவது உன் காப்பி நல்லா இருக்கு மா?

ஐயா நீங்கள் போய் அந்த சோபாவில் அமருங்கள் நான் காபியுடன் வருகிறேன் பெரியவர் சோபாவில் அமர்ந்து நியூஸ் பேப்பரை புரட்டத் தொடங்கினார் Top security appointed to find out the terrorist to the PM's death, within two days this case will be closed, statement by kathiban
பரபரப்பானார் வந்தார் குளியலறைக்குச் சென்று வெளியே வந்தார், தன் அறைக்குள் சென்றார் மிடுக்கான தோற்றத்துடன் வெளியே வந்தார். தன் பாதுகாப்பு தூப்பாக்கியை எடுத்து கொண்டு தன் Innova காரில் விரைந்தார்.

ஐயா ஐயா என்று கத்திக்கொண்டே ராமமூர்த்தி துரத்தினார் அவரது குரல் கார்த்திபனுக்கு கேட்கவில்லை.

ஆட்கள் அதிகமில்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு வந்து நின்றது Innova. ஏற்கனவே திட்டம் செய்து வைத்தது போல் தன் team முக்கு message அனுப்பினார் கையில் துப்பாக்கியை பத்திரப்படுத்திக் கொண்டார் மெல்ல நடக்கத் தொடங்கினார் காட்டுப்பகுதியில் திரும்பி வருவதற்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டே நடந்து சென்றார் காய்ந்த இலைகளின் மீது கால் பதித்து வரும் சத்தத்தின் அளவை குறைத்துக் கொண்டு நடந்தார்.

அவருடைய முந்தைய operations எல்லாம் meeting point இல்லாமல் அமைந்ததில்லை this operation not to find out the terrorist ,but also it's demolish the entire terrorists camp. so all the discussions already over. It's a time for execution என்று தன் team- முக்கு மீண்டும் ஓர் message அனுப்பினார்

15நிமிட நடைபயணத்தில் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது (உடலுக்கு மட்டும்)அதனால் அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார் 15 நிமிட இடைவெளியில் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

காய்ந்த இலைகளின் மீது சத்தம் எழுந்து திரும்பி பார்த்தார் தனக்கு பதிலாக வேறு ஒரு போலீஸ் டீம் வருவதை உணர்ந்தார் அருகில் நெருங்கினால் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக மறைந்து கொண்டார் அவர்கள் அந்த இடத்தை விட்டு செல்லும் வரை மறைந்திருந்தார். இந்த டீமில் சிலர் கார்த்திபன் என்ற பெயரை வைத்து பேசிக்கொண்டே சென்றனர். சத்தமில்லாத அவர்களை பின் தொடர்ந்தார் இரண்டு கிலோமீட்டர் பயணத்தின் முடிவில் ஓர் குன்றின் ஆரம்பத்தில் அனைவரும் தங்களை தயார் செய்து கொண்டு வரிசையாக நின்றனர்.

சற்று நடுவயது கதிரவன் ips முன்வந்து பேச தெடங்கினார் Boys we almost reach the designation, so prepare for execution and be alert.

கார்த்திபன் குழப்பமானார் தன் team இன்னும் வராததால், சற்று தடுமாறி பக்கத்தில் இருந்த மரகிளையின் மீது கால் வைத்தார். சத்தம் வந்த திசையை சுற்றி வளைத்தனர் கதிரவன் டீம்.


கதிரவன் நெருங்கி வந்து கார்த்திபன் தலையில் தூப்பாக்கியை வைத்தார். நீங்கள் யார் ? இங்கு ஏன் வந்தீர்கள்?
கார்த்தீபன் தடுமாறி தன் சட்டையில் வைத்திருந்த identity card டை நீட்டினார் . கதிரவன் பார்த்தகணம் சல்யூட் செய்து நீங்கள் என் இங்கு வந்திர்கள், பதில் மற்றம் கேள்வி புரியாமல் குழப்பமானார் கார்த்திபன்

சற்று நேரத்தில் பரபரப்பானார் கதிரவனை பிடித்து தள்ளினர், அவரை நோக்கி வந்த தோட்டா பக்கத்தில் இருந்த மரத்தை துளைத்து. அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர் கிட்டத்தட்ட அந்தப் பிரிவின் தலைவர் போல் கட்டளையிட்டு கொண்டே தாக்குதலை தொடங்கினார் கார்த்திபன்

தன் தூப்பாக்கியின் தோட்டா தீரும் வரை சுட்டு தீர்த்தார். தீவிரவாதிகள் நிலைகுலைந்து மரணனித்தனர் சிலர் ஓடினர்,

ஒரு மணிநேர போராட்டத்துடன் முடிவு பெற்று வீடு வந்து சேர்ந்தார்
வேகமாக ஓடிவந்தார் ராமமூர்த்தி. ஐயா எங்கு சென்றிர்கள். தனியாக எங்கு போக வேண்டாம் என்று doctor சொல்லியுருந்தார் என் இப்படி, இல்ல ராமு எனக்கு ஒன்னும் புரியவில்லை

வாங்க வந்து சோபாவில் உட்காருங்க, நான் போய் காபியும், மாத்திரையும் எடுத்து வரேன். பதட்டத்துடன் இருந்த கார்த்திபன் சற்று உற்று கலைந்து கிடந்த newspaper-ரை பார்த்தார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது newspaper... Man with Alzheimer disease (AD)
Author :SENTHILKUMAR

எழுதியவர் : செந்தில்குமார் (16-Dec-18, 5:52 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
பார்வை : 183

மேலே