அலைபேசி

மனிதன் அகநூலை
மறக்கச் செய்தது முகநூல்

கள்ளக் காதல் செய்வோருக்கு இது வலை
நல்லக் காதல் செய்வோருக்கு
அதிகமில்லை இதன் விலை

புலனத்தால் குழுக்களில்
சலனம்

இன்று பலரை அலைய வைப்பது
அலைபேசியே

சிட்டுக்குருவியின் கல்லறை
இதனால் மனிதன் வெளியே
செல்லாமல் அடைபட்டது கல் அறை

அலைபேசி கண்ணால்
நாம் பருகும் மது
பழுதானால் துடித்துப்போகும் மனது

கட்செவிக்களால்
நம் நற் செவி செவிடானது

புலனதால் புவியில்
மனிதம் புலப்படாமல் போனது

அலைபேசியால் மெய்யலவில் பாசம்
குறைந்தது
கையலவில் ஆபாசம் நிறைந்தது

இணையத்தில் இணையவைத்தது
இணையிடம் மனையிடம் விலக வைத்தது

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (16-Dec-18, 8:30 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : alaipesi
பார்வை : 333

மேலே