பக்கத்தில் வந்த தோல்வி

பக்கத்தில் வந்த தோல்வி பற்றி
வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்.

முந்தைய போட்டியில் குண்டாய் வந்தவனையும்
தூக்கிவீசிப் பந்தாடினேன்
வென்றேன்.

இம்முறை
என் போட்டியாளன் நோஞ்சான்

ஆடிக்காற்றில் அம்மியாய்
அவனைப்
பறக்கவிட நினைத்தேன்.

தூக்கி வீசினேன்
விழும்போது அவனோ

என் காலைப் பிடித்து இழுக்க
நெஞ்சை வானுக்குக் காட்டி பொத்தென்று விழுந்தேன்.

பஞ்சுப் பயல் அவனோ
பறந்து வந்து
என் நெஞ்சில்
குதித்துக் குதித்துக்
கொண்டாட்டம்
போட்டான்!

எழுந்து அவனை வீழ்த்த
முயன்றேன்
மூச்சு முட்டியது.

ஜெர்சி காளையான நானோ
அந்த காங்கேயம்
இளங்காளையை
அடக்கமுடியாமல்
அடங்கிப் போனேன்.

பருத்த உடலிருந்தும்
நன் தோற்றதுதான் விந்தை!
பக்கத்தில் வந்த தோல்வி
இது படுதோல்வி அல்ல.

விட்டுப் பிடிப்பதில்
வல்லவன் நானேன்பதை
நாடே அறியும்.

தேக்கி வைத்த
கொழுப்பை யெல்லாம்
திரட்டி உரமாக்கி

அடுத்த போட்டியில்
அந்நோஞ்சானை
கசக்கிப் பிழிந்து
அவன் குருதியைப்
புனலாய் ஓடவைப்பேன்.

ஆண்டவன் மேல் ஆணை
அவனின்றி அணுவும் அசையாது.

எழுதியவர் : மலர் (17-Dec-18, 12:11 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 65

மேலே