தேரையச் சித்தரின் பதார்த்த குண சிந்தாமணி ஐந்திணை நிலங்களின் குணங்கள்

தேரையச் சித்தரின் பதார்த்த குண சிந்தாமணி
ஐந்திணை நிலங்களின்குணங்கள்
--------------------------------------------------
குறிஞ்சிநிலம்
---------------------
(புத்தகத்தின் அச்சின் படி)

குறிஞ்சிவருநிலத்திற் கொற்றமுண்டிரத்தம்
உறிஞ்சிவருசுரமு முண்டாம் - இறிஞ்சறைக்
கையமேகங்கரத் தாமைவல்லையுங்கதிக்கும்
ஐயமேகங்குமறி

(இப்படியிருக்கலாம்)

குறிஞ்சி வருநிலத்தில் கொற்றமுண்டி ரத்தம்
உறிஞ்சி வருசுரமு முண்டாம் - இறிஞ்சறைக்
கையமே கங்கரத்தா மைவல்லை யுங்கதிக்கும்
ஐயமே கங்கு மறி

சிலேஷ்டம வீடாகிய குறிஞ்சியென்று பெயர் பெற்ற மலைப்பூமியில் விளைகின்ற சகல ஔஷத முதலிய பொருள்களுக்கும் வன்மையுண்டாம். இதில் வசிப்பவர்களுக்கு உதிரத்தை முறிக்கின்ற சுரமும் வயிற்றில் ஆமைக்கட்டியும் வல்லைக்கட்டியும் உண்டாகுமாம்.

நெய்தல் நிலம்
------------------------
(புத்தகத்தின் அச்சின் படி)

நெய்தனில்மேருப்பை நீங்காதுறினுமது
வெய்தனில்மேதங்கு வீளாகும்நெய்தன்
மருங்குடலைமிக்காக்கு வல்லுறுப்பைவீக்குங்
கருங்கடலைக்கீழிறக்குங் காண்

(இப்படியிருக்கலாம்)

நெய்தனில் மேருப்பை நீங்கா துறினுமது
வெய்தனில் மேதங்கு வீளாகும் - நெய்தன்
மருங்குடலை மிக்காக்கு வல்லுறுப்பை வீக்குங்
கருங்கடலைக் கீழிறக்குங் காண்

நெய்தல் நிலம் உவர்ப்பு மிகுந்தது.. அதில் அகலாதிருப்பின் அது பித்த வாயு தங்குவதற்கே இடமாகும். இதில் வசிப்பவர்கள் தேகத்திலுள்ள நுட்பதானங்களில்
சிலேஷ்மநீரானது கண்டுகண்டாய் தடித்தலை உண்டாக்கும். தவிர பாதமுதலிய வன்மையான உறுப்புகளிலும், சில பாதரோகத்தையும் குடலண்ட வியாதியையும் உண்டாக்கும்.

முல்லைநிலத்தின் குணம்
----------------------------------------
(புத்தகத்தின் அச்சின் படி)

முல்லைநிலத்தயமை முரிநிரைமேவினுமவ்
வெல்லைநிலைத்துபித்த மெங்குறுங்காண் --- அல்லையெனின்
வாதமொழியாததணுண் மன்னுமவைவழிநோயப்
பேதமொழியாதறையப் பின்பு

(இப்படியிருக்கலாம்)

முல்லைநில மேதை முரிநிரை மேவினுமவ்
வெல்லை நிலைத்துபித்த மெங்குறுங்காண் --- அல்லையெனின்
வாதமொழி யாததணுண் மன்னும வைவழிநோய்ப்
பேதமொழி யாதறையப் பின்பு


முல்லைநிலத்தில் ஆடு,எருமைப்பசு இவைகளின் கூட்டங்களெல்லாம் உடையதாக இருப்பினும் அது பித்ததோஷம் அதிகரிப்பதற்கேயிடமாம் அப்படியல்லவென்றால் அத்துடன் வாததோஷமும் நீக்கமின்றிப் பொருந்தும். அவ்விருவகை தோஷங்களால் உற்பத்தியாகிற ரோகங்களைச் சொல்லப்புகின் அரிதாகும்.

மருதநிலத்தின் குணங்கள்.
-----------------------------------------
(புத்தகத்தின் அச்சின் படி)

மருதநில நன்னீர் வளமொன்றைக்கொண்டுமே
பொருதநில மாதியநோய் போக்குங் கதநிலத்
தாறிரதஞ்சூழ வருந்துவரென்றாங்பிணியெல்
லேறிரதஞ் சூழ்புவிக்கு மில்

(இப்படியிருக்கலாம்)

மருதநில நன்னீர் வளமொன்றைக் கொண்டேப்
பொருதநில மாதியநோய் போக்குங் - கருதநிலத்
தாறிரதஞ் சூழருந்து வாரென்றாங் கே பிணியெல்
லேறிரதஞ் சூழ்புவிக்கு மில்

மருதநிலம் நல்லநீர் வளப்பம் ஒன்றினால் வாத பித்த சிலேஷ்மங்களாலுண்டாகிற ராகங்கள் போகும். அன்றியும் அந்நிலத்தில் விளைகின்ற அறுசுவைப் பதார்த்தங்கள் சேர்ந்த உணவை உண்வர்தம் பேரைச் சொன்னாலும் ரோகங்கள் இவ்வுலகத்தில் இல்லையாம்.

பாலை நிலத்தின் குணங்கள்.
--------------------------------------------
(புத்தகத்தின் அச்சின்படி )

பாலைநிலம்போற் படரைப்புறப்பிற்க
மேலைநிலமியா துவிரித்ததற்கு வேலைநில்
முப்பிணக்குமில்ல முறையேயவ்றாலா
மெப்பிணக்குமில்லா மஃதென்

(இப்படி இருக்கலாம்)
பாலை நிலம்போற் படரைப் புறப்பிற்க
மேலைநிலம் யாது விரித்ததற்கு - வேலைநில்
முப்பிணக்கு மில்லம் முறையே யவறாலா
மெப்பிணக்கு மில்லாமஃ தென்


பாலைநிலத்தை விட அதிக துன்பத்தைத் தரும் நிலம் உலகிற் வேறேது சொல்லும். வாதபித்தங்களுக்கும் அவைகளால் முறையே வரும் சகல பிணிகளுக்கும் அது இடமாம்.

படைப்பு :
--- பழனி ராஜன்

எழுதியவர் : பழனிராஜன் (18-Dec-18, 3:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 99

மேலே