பள்ளி எழுச்சிப் பாடல் - - - புதிய முயற்சி - - -

பள்ளி எழுச்சிப் பாடல் - - - ( புதிய முயற்சி )
*****************************************************************

பண் அதிர வார்த்தைகொண்டு பாடுவோர்
பாழ்மனத்தார் என்றுரைப்பார் பண்பட்டோர்
மண் அதிரக் கால்நடக்கும் மங்கையரும்
பெண்டிர் இலையென்பார் பெற்றுணர்ந்தோர்
விண் அதிர வானாய்வார் மண் அதிரத்
தாங்காதார் ! கண்டுகண்டு கண்ணதிர்ந்தோம்
புண்உதிர்த்த இப்பிறவிப் புற்றுநோய்
போயொழியப் பள்ளி எழுந்தருளாயே

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Dec-18, 11:07 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 41

மேலே