ஆதியில் ஒரு காட்சி

ஒன்றை காட்டுவேன்.
நீ பார்த்ததும் பின்
என்னை கூர்ந்து பார்ப்பாய்..
பிறகு நம்புவாய்.

நீ நம்புவதை
பிறருக்கு அறிவிப்பாய்...
அறியாதோருக்கு நீயே
எடுத்து செல்வாய்.

உன்னை பார்ப்பார்கள்.
நீ அவதரிப்பாய்.

மாறுமென்று கூறி உன்னை
மாற்றிக்கொள்வாய்.


உன் அங்கங்கள்
வாய்களாகும்...
பாடும்,பேசும்,விவரிக்கும்
என் புகழினை...

உன்னோடு வருபவர்
நூறாயிருந்து மாறுமது பின்
லட்சத்திலிருந்து கோடிகளாய்...

அன்று நான் காட்டியது இன்று
உன் நினைவில் இராது ஆயினும்...
நீ எதையோ பார்த்ததை
அவர்களிடம் ஒப்புவிப்பாய்...
அவர்கள்
என் புகழ் பாடுவர்...

இதனை நீதான்
ஜனநாயகம் என்கிறாய்.
நான் பாராட்டுகிறேன்.
நீ மெய் சிலிர்க்கிறாய்.
புன்னகைக்கிறோம்...

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Dec-18, 11:10 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 54

மேலே