முழுவலுக்கில்லையடி முழுநிலவே

ஏதுமில் இவ்வாழ்வில்
ஏதமிலா னென்றேத்தி
ஓதினைநீ உயர்வார்த்தை!
போத இருள் சூழ்ந்ததுவோ?
ஏதுவும் யாதோ இன்று
ஓர்மத் தினவுடைத்துக்
கூர்வாள்க் கொடுஞ்சொல் வீசி
ஏர்முனை போலுமென்
நேர்மையில் கரும்பொட்டிட்டு
நீரடித்த இலைச்சருகாய்
வேரறுந்த மரமாய் ஆக்கி
வாரணங்கே எனையகலக்
கோர மனம் கொண்டதேனோ?
பழகப் பழகப் புளிப்பதெல்லாம்
பாலுக்கே தான் அன்றி
முழுவலுக்கில்லையடி முழுநிலவே!
நரை திரை தோன்றிடினும்
நிலைத்திடுவ தன்பு ஒன்றே நீயறி!
~ தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (20-Dec-18, 10:49 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 216

மேலே