அடுத்த கட்டம்

அதே நிலையில் இருக்கிறோம் எந்த வித மாற்றமும் இல்லாமல்.
ஆனால், அடுத்தடுத்து அடுத்தகட்டம் வந்து கொண்டே தான் இருக்கும் முடிவில்லா தொடர்வண்டியாய்.

காலை முதல் மாலை வரை
பிறப்பு முதல் இறப்பு வரை நாம் செய்ய வேண்டிய அடுத்த கட்டம் என்ன? என்று பார்த்தால் அதில் பெரிய பட்டியல் நீள்கிறது எண்ணிறந்த நிலைவரை.

எந்த நிலைவரை முன்னேற்றம் பெற்றிருந்தாலும் அடுத்த கட்டம் என்ன என்பதில் உள்ளது முக்கியத்துவம்.
சிறந்த குரு எப்போதும் பயின்று கொண்டே இருக்கிறார்.
சிறந்த மருத்துவர் கூட எப்போது தான் கற்ற மருத்துவத்தை பயிற்சித்துக் கொண்டே இருக்கிறார்.

எல்லாம் கற்றோம் என்ற தலைக்கணம் ஒரு நொடிபொழுதில் கற்றதனைத்தையும் காணாமல் போக செய்திடும்,
ஆதலால் நம்முடைய அடுத்த கட்டம் அறிந்து பயிற்சி, முயிற்சியைக் கைவிடாமல் ஆற்றுவதே நம் கடமை.
தேவை நோக்கிய ஓட்டத்திலும்,
நம்முடைய புரிதல் வளர வேண்டும்.

பணம் சம்பாதித்தல் முதல் கட்டம் என்றால்
அதை செலவு செய்தலே அடுத்த கட்டம்.
சம்பாதித்ததை எல்லாம் செலவு செய்யாமல் தேக்கி வைத்து மிச்சம் பிடித்தாலும்
காலத்தினால் அதை தக்க சமயத்தில் செலவு செய்ய வேண்டி வரும் அடுத்த கட்டமாய்.
நாம் நம் அடுத்தகட்டம் நோக்கி பயணிப்போம்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Dec-18, 1:02 pm)
Tanglish : atutha kattam
பார்வை : 1149

மேலே