பென்சில் கனவுகள்

மொழியற்ற
மொழிபெயர்க்கவும்
முடியாத
கவிதையா? எண்ணமா?
நிறங்களும் புள்ளிகளும்
கோடுகளும் நிறைந்த
வெறும் நிரல் பழகையா
தெரியவில்லை...
உதாரண உருவமும்
உள்ளூர
தெளியவில்லை ..
மேற்கோடுகளில்
எவ்வளவு வரைய
முயன்றும்
காணும்
சட்டத்தில் அடக்க
முடியவில்லை...
நீ...?
எங்கேதானடி
இருக்கிறாய்...
நானோ ஓவியனுமல்ல..
கவிஞனுமல்ல....

எழுதியவர் : சுரேஷ் குமார் (22-Dec-18, 12:20 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : pencil kanavugal
பார்வை : 73

மேலே