ஏனோ என்னை பிடிக்காது போனது

எனக்கு பிடித்தது
என்று எதுவும்
இல்லை

எனக்கு பிடிக்காதது
என்று ஒன்றும்
இல்லை

என் கண்ணில்
அவள் பட்டப்
பின் தான்

பிடித்ததும்
பிடிக்காததும்
என

என் ரசனை
மாறியது

பிடித்தது என்ற
பட்டியலில்

அவள் முக்கிய
இடம் வகிக்க

அவளுக்காக
காத்திருந்தது
பிடித்தது

அவளையே
பார்த்திருந்தது
பிடித்தது

அவளுடன்
சேர்ந்திருந்தது
பிடித்தது

பிடிக்காததும்
என் பட்டியலில்
இடம்பெற

எங்களை பிரிக்கும்
காலம் பிடிக்காது
போனது

பிரிக்க நினைத்த
உறவுகள் பிடிக்காது
போனது

அவள் இல்லா
நேரம் பிடிக்காது
போனது

இவள் ஒருத்தியாள்

எனக்கு இன்றும்
பிடித்ததும்
பிடிக்காததும்

தொடர

அவளுக்கு மட்டும்
ஏனோ என்னை
பிடிக்காது போனது..,

எழுதியவர் : நா.சேகர் (22-Dec-18, 8:34 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 917

மேலே