வெறுமை --- நையாண்டி மேளம் 2

வெறுமை

வெகு நேரமாய்
உணவுத் தட்டு

என் முன்னால் ;

சுவர் கடிகார ஒலி
துல்லியமாய் காதில் ;

உண்ணப் போவதில்லை

வைராக்கிய
காத்திருப்பில் நான் ;

யாராவது வாருங்களேன்
விரைந்து --

நான் ஊட்ட
அல்லது எனக்கு ஊட்ட !

எழுதியவர் : Dr A S KANDHAN (22-Dec-18, 11:58 pm)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 46

மேலே