கட்டவிழ்ந்த கார்க்கூந்தல் காற்றினில் ஆடிட

கட்டவிழ்ந்த கார்க்கூந்தல் காற்றினில் ஆடிட
பொட்டு நிறைமுகம் மொட்டவிழ் தாமரையாய்
வட்டமுகத் தில்வான்நி லாசித் திரம்தீட்டும்
பட்டுச்சே லைபூஞ்சோ லை !

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா -

கட்டவிழ்ந்த கார்க்கூந்தல் காற்றினில் ஆடிட
பொட்டு நிறைமுகம் மொட்டவிழ் தாமரையாய்
வட்டமுகத் தில்வான்நி லாசித் திரம்தீட்டும்
பட்டுச்சே லைபூஞ்சோ லைதே வதையிவள்
மட்டிலா பேரெழில்ப்பா வை !

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

ஸ்பரிசனார் முகம் இரண்டு முறை ஏனோ என்று கேட்டதால்
பின்னிரு அடிகளை மாற்றி வடிவமைத்தேன் :

கட்டவிழ்ந்த கார்க்கூந்தல் காற்றினில் ஆடுதடி
பொட்டு நிறைமுகம் மொட்டவிழ் தாமரையோ
பால்வண்ண மேனியில் பால்நிலா வும்தழுவ
வேல்விழியே நீகொல்லா தே !


கட்டவிழ்ந்த கார்க்கூந்தல் காற்றினில் ஆடிட
பொட்டு நிறைமுகம் மொட்டவிழ் தாமரையாய்
வட்டமதி நெற்றியில் பாதியாய் தோன்றிட
பட்டுச்சே லைபூஞ்சோ லைதே வதையிவள்
மட்டிலா பேரெழில்ப்பா வை !
----மாறிய வடிவில் பஃறொடை யும் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Dec-18, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 120

மேலே