உன் முறுவல் பூ
உன் முறுவல் பூ
==============================================ருத்ரா
கனவு எனும்
மலைப்பாம்பு விழுங்கலில்
எனக்கு ஒரு நெடும்பயணம்.
அழகிய வட்டங்கள் அதன் மேல் தோலில்
சுருங்கி விரிந்து கொண்டிருந்தது.
நகரும் ஓவிய உடல் சுற்றிக்கிடக்கும்
என் உள்ளத்துள்ளும்
உன் உருவத்தின் தூரிகை வருடல்கள் தான்!
என்னைச்சுற்றி
இனிய மரணம்
என் உடலை முறுக்கியது.
ஆனால் கணம் தோறும் கணம் தோறும்
நான் பிறந்து கொண்டே இருந்தேன்.
அன்பே!
உன் விழி புகுந்த நான்
இன்னும் இங்கு பத்திரமாக இருக்கிறேன்.
மீண்டும் கால் பதிப்பேன்
இந்த மண்ணில்
உன் முறுவல் பூ ஒன்றை ஸ்பர்சிக்க.
============================================================