தேரையரின் ஏரி, குளங்கள்,ஓடை , சுனை, கிணறு, ஊற்று நீர்களின் குணங்கள் 6

தேரையரின் ஏரி ஓடை ஊற்று குளம், சுனையாகிய வற்றின் நீரின் குணங்கள்

குளத்து ஜலத்தின் குணங்கள்

குளத்து சலந்தான் கொடிதான வாதம்
வளர்த்துவிடு மப்பா மதுவுங் - குளிர்ச்சியையு
மெத்தஉண் டாக்குமென மேதினியோர் தங்களுக்கு
கொத்தலரும் பூங்குழலாய் கூறு ( 2 8 )


புஷ்பகொத்துகளலரும் அழகியக் கூந்தலையுடைய பெண்ணே குலத்துசலமானது வாதரோகத்தை விருத்தி செய்வதுமன்+றி மதுபிரமேக சலத்தையும் சீதளத்தையுமுண்டாக்கு மென்க

தாமரைக் குளத்து ஜலத்தின் குணங்கள்
.

தண்டாம ரைக்குளத்திற் தஙகும் புனலதனா
லுண்டாகும் வாதபித்த முண்மையே - பண்டான
வெக்கைநோய் மாறாது வீறுந் தவனனுமா
மைக்கருங்கண் மாதேவ ழுத்து (30)

மையணிந்தக் கண்களுடையமாதே தாமரைக்குளத்து தண்ணீ ரால் வாதபித்தாந் தொந்தம் புராணசுரம் அதிதாகம் இவைகள் அதிகரிக்குமாம்.

அல்லிக்குளத்து நீரின் குணம்.


அல்லிக் குளத்துநீர் அக்னிமந் தப்பேதி
மெல்லச் சொறிசிரங்கு வெட்புடனே - கொல்லுலகில்
தாலுதனி லட்சரமுந் தாதுநஷ்ட முங் கொடுக்குங்
கோல மலர்த்திருவே கூறு. (31)



அல்லிக்குளத்து நீரால் அஜீரணபேதிசொறி புன்சுரம், தாலுகண்டரோகம் தாது நஷ்டம் இவைகளையுண்டாக்கும் எங்க


அதிகுளிர்ச்சி சரகூறல் உள்ள குளத்துஜலத்தின் குணம்


சீத மிகுந்தடநீர்ப் தேகத்த ளர்ச்சிவிக்கல்
வாத கபங்கடிகள் வாந்திநளிர் - மோதிருமால்
வீறுகுணம் நோயிவைவி ளைக்கும் சரகுமதி
லூறுமெனி நோய்பலவா முன்னு.(31)


அதிகுளிர்ச்சியுடைய குளத்து ஜலமானது தேகங் கட்டுவிடல் விக்கல் வாந்தி குளிசுரம் வாத சிலேத்துமங்கள் தொந்தம் வண்டுகடி முதலிய சில்விஷம் ஆகியவை உண்டாம். அதில் சருகு இருக்குமானால்காசம் வயிற்றுவலி எனப் பலரோகம் உண்டாகும் என்க.

ஏரி ஜலம் சுனை ஜலம் ஆகியவற்றின் குணங்கள்.

எரிநீர்வாத மிலைத்த துவர்ப்பாகுங்
கூறியதோர் கற் சுனைநீர் கூறுங்காற் சீரியதோர்
வாதமொடு பித்தமேழும் வைத்தொருநாற் பின்னுண்ணிற்
சேதமில்லை உட்டினமாஞ் செப்பு (32)


இளைத்தத் துவர்ப்புச் சுவையுடைய எரிஜலமானது வாயுவை விருத்தி செய்யும் கற் சுனை ஜலம் வாத பித்த தோஷமாம். அதையோருநாள் வைத்திருந்து மறுநாலருந்தில்
குளிர்ச்சி நீங்கி உஷ்ணம் உண்டாகும் என்க


ஓடை ஜலத்தின் குணம்

ஓடை தருநீரை யுண்ணயதி தாகமுமா
மேடையெனுந் தோட்பலன் மெத்தவா- மோடைமலர்க்
கண்ணா யதுதுவர்ப்புங் காண மதுரமுமாம்
என்நாளும் பாரிலி யம்பு ( 3 3 )


தாமரையை ஒத்த கண்களையுடைய பெண்ணே துவர்ப்பும் மதுரம் உள்ள ஓடைசலம் குடிப்பவர்களுக்கு மிகுந்த தாகமும் புஜபலமும் உண்டாமென்றுச் சொல்லு.

கிணற்று ஜலத்தின் குணம்

ஆசாரக் கூபத்தின் நீரா லதிதாகம்
வீசாகச் சூடுபசி மெய்காந்தல் - மாசூலை
மெய்வலியு ளைவுவீழ்ம யக்கமுஞ்சோ பைபித்தம்
பையவரு மீளையறும் பார் (34)

குற்றமில்லாத கிணற்று ஜலத்தினால்மிகுந்ததாகம் உஷ்ணம் தீபனம் தேக அழற்சி சூலை சரீரத்துக் கடுப்பு இடுப்புக் குடைச்சல் மயக்கம் வீக்கம் பித்த தோஷம் சுவாசம் ஆகியவை விலகும்.

சுனைஜலத்தின் குணம்

சுனைப்புனலைத் துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந் தார்க்கும்
கணைப்புரு சீதசுரம் காணும் - வினைக்குரிய
வாதமுறு மத்தால் வருமேந டுக்களின்னும்
ஓதுபித்த கோபமுமா முன்னு (35)

சுனைத்தண்ணீரையுண்டவர்க்கும் அதில் ஸ்நானம் செய்தவர்க்கும் இருமலோடுக்கூடிய சீதசுரம்.,
வாதகோபம் கபவாதரோகம் பயித்திய ரோகம் இவை உண்டாகும்


ஊற்று நீரின் குணம்

ஊற்றுநீர் பித்த மொழிக்கு மினிப்பாகும்
ஆற்றிவிடுந் தாகத்தை யப்பொழுதே - கூற்றுவிழக்
கொம்பரி டையாய்கு ணாகுணங்க ளைத்தெளிவாய்
நம்பியுல கோறறிய நாட்டு (36)


மதுரசம் பொருந்திய ஊற்று ஜலமானதுமிகுந்த பித்தத்தையும்அதிதாகத்தையும் சாந்தி செய்யும்

எழுதியவர் : பழனிராஜன் (25-Dec-18, 9:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே