தனிமை தரும் வலி பாகம் 3

தனிமை தரும் வலி பாகம் 3


இரவு வெகுநேரம் தூக்கம் வராமல் தவித்ததால் காலையில் தாமதமாக எழுந்தான் வாசு.
கடிகாரத்தை பார்த்தவுடன் பதறியடித்துக்கொண்டு கிளம்பினான்...


வாசு வீட்டிற்கு இரண்டாவது பையன். வாசுவின் தந்தை ரத்னசாமி போக்குவரத்துத்துறையில் கொடிகட்டிப்பறக்கும் தொழிலதிபர்..
வாசுவின் அம்மா சித்ரா அன்பான குடும்பப்பெண்..
வாசுவின் அக்கா அபிநயா மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறாள்...

அன்பான குடும்பம் தேவைகேற்றதைவிட பணம் இருந்தாலும் வாசு தன்னை எளிமையாக காட்டிக்கொள்பவன்.
தனிமையை விரும்புபவன் .
சிறுவதிலிருந்தே யாரிடமும் ஒட்டாதவன்.வாசுவிற்க்கு எல்லாம் குரு தான்...
வாசு யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவன்...


வாசு அவசரத்தில் கிளம்பிக்கொண்டு வந்தான்..
வாசுவை சாப்பிடும் மாறு சித்ரா கேட்டாள்..வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தனது இருசக்கரவாகணத்தில் ஏறியபோதுதான் முக்கியமான ஒன்றை மறந்தது நினைவிற்க்கு வந்தது..மீண்டும் வீட்டிற்குள்ளே ஓடி தனது அறையில் புறாக்களுக்கு உனவு வைத்துவிட்டு வந்து வாகணத்தை எடுத்துக்கொன்டு கிளம்பினான்...
கல்லூரிக்குள் வந்தவன் அவள் எங்கே என்று தேடினான் அவள் இன்னும் வராததால் அவளுக்காக காத்திருந்தான்....
....தொடரும்...

எழுதியவர் : ஜீவா ரவி (26-Dec-18, 12:18 am)
சேர்த்தது : ஜீவா ரவி
பார்வை : 264

மேலே