தலைமுறை தடுமாற்றம்

சகிப்புத்தன்மையின் அளவு
பதிவிறக்க காத்திருத்தலில்
முடிவு செய்யப்படுகிறது...

ஆரோக்கிய வாழ்வு
அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட
தூளாக மாறியுள்ளது...

விளையாட்டு மைதானம்
கையளவு சுருங்கிய கைப்பைசியாக
கருதப்படுகிறது...

நட்பின் அடையாளம்
விருப்ப பொத்தானின் சொடுக்கலில்
உணரப்படுகிறது...

அழகின் இலக்கணம்
உண்மை மறைக்கும் செயலியால்
வரையருக்கப்படுகிறது...

தேவையின் மதீப்பீடு
தான் சூழ்ந்தவரின் ஒப்பீட்டளவில்
கணக்கிடப்படுகிறது....

கற்றவரின் அறிவு
மென்பொருள் கையாளும் திறனாக
பார்க்கப்படுகிறது...

பிறரின் துன்பம் துடைப்பு
வலைதள பதிவின் பகிர்தலில்
முடிந்துவிடுகிறது...

தனிநபர் பாதுகாப்பு
கடவுச்சொல்லின் கட்டமைப்பில்
கணிக்கப்படுகிறது...

ஆகமொத்தத்தில் - நம்
அகவுரிமை என்பது
அண்டத்தின் மற்றோர் மூலையில்
காட்சிப்பொருளாக!!!

எழுதியவர் : காதம்பரி (27-Dec-18, 3:21 pm)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 276

மேலே