இடைத்தரகு

வாங்க,விற்க
தரகு

வசதிக்கு ஏற்ப
மாறும்

கன்னியின் கற்பு
இங்கு

விற்க,வாங்க

இடைத்தரகர்
இதற்கு உண்டு

உயிரணு முதல்

கருப்பை வரை

விற்க,வாங்க
முடியும்

இதற்கும் தரகர்
இங்கு உண்டு

கடவுளைக் கூட
இடைதரகர்

இன்றி அனுகவது
கடினம்

இப்படி நீளும்
பட்டியலில்

கடலும்,காற்றும்
வானமும்

மட்டும் தப்பித்தது
இடைத்தரகர்

இதன் இடையில்
இல்லாததால்

எழுதியவர் : நா.சேகர் (27-Dec-18, 6:33 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 146

மேலே