சமுதாயக் கவிதை
💠💠💠💠💠💠💠💠💠💠💠
*சமுதாயக் கவிதை*
*கவிஞர் கவிதை ரசிகன்*
💠💠💠💠💠💠💠💠💠💠💠
திருமணத்திற்கு முன்பு
'சகியே' என்று
அழைத்த காதலன்....
திருமணத்திற்குப் பின்பு
அழைக்கிறான்
'சனியனே!' என்று...
✔✔✔✔✔✔✔✔✔✔✔
கல்யாண விருந்தில்
சாப்பாட்டை
முழவதும் சாப்பிடும் அளவுக்கு
பசி இறந்தாலும்...
உணவை கொஞ்சம்
சாப்பிடாமலேயே!
இலையில்
மீதி வைத்துவிட்டு வந்தேன்....
வெளியே!
காத்திருக்கும் நாய்கள்....!
✔✔✔✔✔✔✔✔✔✔✔
பணம்
வரும் என்று
விவசாயம் செய்தார்..
ஆம்...!
கடைசியில்
வீட்டுக்கு வந்தது
விவசாயின் 'பிணம்'
✔✔✔✔✔✔✔✔✔✔✔
முள் என்பது
உனக்கு வேண்டுமானால்
இடைஞ்சலாக
இருக்கலாம்....
ஆனால்
அதுதான் பாதுகாப்பு
ரோஜா மலருக்கு...!
✔✔✔✔✔✔✔✔✔✔✔
இன்று .....
கூவிய குயில்கள்
பதில் குரலுக்கு
காத்திருந்த
ஏமாந்த போகின்றன.
நாளைய தலைமுறைகள்
படிக்கும்
கூவுவதற்கு மறந்த
குயில்களைப் பற்றி...!
கவிதை ரசிகன்
💠💠💠💠💠💠💠💠💠💠💠