தகவல் திருடன் தர்மசேன Hacker Dharmasena

திருடர்கள் பலவிதம். பணத்துக்காக திருடுபவன். மற்றவன் மனவியையோ அல்லது காதலியை திருடுபவன். . முடிச்சு மாறி. கடைகளில் பொருட்கள் திருடுபவன். இலக்கியத் திருடன் அரசியல்வாதியின் வெற்றிக்காக ஒற்று வேலை செய்து எதிரியின் தகவல் பற்றி திருடுபவன் இப்படி நீண்ட பட்டியல் உண்டு

****
இலங்கையில் சப்ரகமுவ மாகாணத்தில், தெரினியாகல என்ற கிராமத்தின் பெயர் ஒருவகை பாம்பு இனத்தைக் குறிக்கும். அந்தக் கிராமத்துக்கு அப் பெயர் வந்த முக்கிய காரணம் பிரபல விலங்கியல் விஞ்ஞானி முனைவர் பௌலஸ் எட்வர்ட் பீரிஸ் தெரினியாகல( Dr. P. E. P. Deraniyagala) விலங்கியல் விஞ்ஞானி பிறந்த ஊர் தெரனியாகல. கொழும்பில் இருந்து அவிசாவலை ஊடாகத் தெரனியாகல என்ற ஊருக்கு போவதற்கு 73 கி. மீ பயணிக்க வேண்டும் . மேலும் அங்கிருந்து 14 கி. மீ மலைப்பகுதியில் பாம்பு போல் வளைந்து செல்லும் B93 பாதையூடாக பயணித்தால் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலைத் தாண்டியவுடன் வருவது தரம் ஊயர்ந்த தேயிலை வளரும் நூரி தேயிலைத் தோட்டம். இத் தோட்டத்தில் தான் பெரிய துரை ஒரு அரசியல் வாதியின் கூட்டத்தால் கொலை செயப்பட்டார் . அந்த அரசியல்வாதி, ஆட்சி செய்யும் அரசியல் கட்சியை சேர்ந்தவர் போதை மருந்து, மாணிக்க கல் தேயிலை ஏற்றுமதி வியாபாரம்ஆகியவை அவரின் தொழில்
***

மேதாவிகளும் திருடர்களும் பல கிரமங்களில் பிறந்தாலும் கிராமத்தில் பிறந்த கணனி மேதாவி தர்மசேனாவின் உதவியோடு எதிரி பற்றி தகவல் திருடி தேர்தலில் வெற்றி பெற முயன்றவர் அரசியல்வாதி முனசிங்கா .

தெரனியாகலவிலிருந்து அவிசாவலைக்கு போகும் பாதையில், சீதாவக்க கங்கை ஒரத்தில் உள்ள ஒரு குக் கிராமத்தில். வறிய குடும்பத்தில் பிறந்தவன் தர்மசேன . அவன் பெற்றோருக்கு மூத்தவன். அவனுக்குப் பின் பிறந்தது இரு சகோதரிகள். அவனின் தந்தை வயல் காணிகளில் மாணிக் கல் தோண்டி எடுக்கும் தொழில் செய்பவன் . அவன் வேலை செய்தது ஒரு பிரபல அரசியல் வாதி முனசிங்காவின் மாணிக்ககல் தோண்டும் காணியில்.
பிறப்பில் இருந்து தர்மா படிப்பில் படு சூரன். அவன் படித்தது தெரினியாகல ஸ்ரீ சமன் தேசியக் .கல்லூரியில்.
ஒரு நாள் தர்மசேனாவை அவனின் தந்தையோடு மாணிக்கல் தொண்டும் இடத்தல் முனசிங்கா சந்திக்க நேரிட்டது . சிறுவனின் சூடித்தனமும் அவனின் பேச்சும் முனசிங்கவுக்குப் பிடித்துக்கொண்டது. அவனைத் தன் அரசியல் தேவைகளுக்கு பாவிக்க முடிவு செய்தார்
தர்மசேனாவின் மேல் படிப்புச் செலவை தான் கவனிப்பதாக தர்மாவின் தந்தைக்கு உறுதி அளித்தார் ,
தர்மா படித்த மத்திய கல்லூரியில் மடிக் கணினி (Lap Top) பாவித்த வெகு சில மாணவர்களில் தர்மாவும் ஒருவன், அது அரசியல்வாதி முன்சிங்கா உதவியால் என்று கல்லூரியில் பேசிக்கொண்டனர் . கணினி உள்ள நுட்பங்களை தர்மசேனா வெகு விரைவில் கண்டு பிடித்தான். கல்லூரியின் வெப் பக்கத்தையும் , அரசியல்வாதி முனசிங்காவின் வெப் பக்கத்தையும் இலவசமாக உருவாக்கி பலரின் பாராட்டைப் பெற்றவன் தர்மா.
ஒரு நாள் முனசிங்கா தர்மாவை தன் வீட்டுக்கு கூப்பிட்டு “ தர்மா நீ வெகு புத்திசாலி என்று எனக்குத் தெரியும் என் பலரும் பாராட்டும் வெப் பக்கத்தை செய்ததுக்கு நன்றி . கணினியில் உன் திறமை எனக்குத் தெரியும் நீ வருங்காலத்தில் என்னவாக நீ வர விரும்புகிறாய்:”?
“நான் கணனி துறையில் தொழில் நுட்ப மென் பொருள் பொறியியலானாக (Software Engineer) வர விரும்புறேன். கணனியின் புது மென் பொருள் மொழிகள் ( Computer languages) கற்று புதுப் புது மென் பொருள்களை (software products) உருவாக்க விரும்புகிறேன் மாத்தையா ( சேர்) “
“ தர்மா இது மிகவும் கடினமான குறிக்கோள். இதற்கு நீ கொழும்புக்கு சென்று மேலும் கணனி துறையில் . பயிற்ச்சி பெற வேண்டும் . 151 நாடுகளில்இருந்து 82,000 அங்கத்தினர்களாக இருக்கும் பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் சொசாயிட்டி நடத்தும கடினமான கணனி அறிவியல் துறை பரீட்சையில் சித்தி அடைய வேண்டும் அதற்கு தேவையான பணம் உன் அப்பாவிடம் இல்லை;”

“அது எனக்குத் தெரியும் மாத்தையா . உங்கள் உதவிருந்தால் என்னால் படித்து முன்னுக்கு வரமுடியும்”
“சரி தர்மா நீ மேலும் படிக்க நான் உனக்கு உதவுகிறேன். ஆனால் அந்த உதவி நான் உனக்கு செய்ய நீ என்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். என்ன சொல்லுகிறாய்”
?
“என்ன ஒப்பந்தம் மாத்தையா”?
“ அந்த ஒப்பந்தம் நீ மென் பொருளில் பல மொழிகளை கற்றபின் நான் சொல்லும் வேலையை நீ எனக்கு மட்டுமே செய்யவேண்டும்.. அதுவும் பிற அறியாதவாறு எனக்கு இரகசியமாக செய்ய வேண்டும்., இது எனக்கும் உனக்கும் இடையே உள்ள இரகசிய ஒப்பந்தம். உன் பெற்றோருக்கும் சகோதரிகளுக்கும் கூடத் தெரியக் கூடாது . தெரிந்தால் என் அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் அதோடு என் கூட்டத்தால் உன் உயிருக்கும் ஆபத்து வரலாம் “
“ அது பற்றி ஒருவருக்கு எங்கள் ஒப்பந்தத்தை பற்றி நிட்சயம் பேச மாட்டேன். இது என் பெற்றோரின் மேல் சத்தியம். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் மாத்தாயா”?
“ என் அரசியல் எதிரி கருணாதாசா இப்போது ஒரு முக்கிய அமைச்சின மந்திரியாக இருக்கிறான் . இலங்கையில் புது திட்டங்களை அமுல் படுத்துவது அவன் பொறுப்பு. அவன் இந்த பதவிக்கு வந்து மூன்று வருடங்களில் வெகு விரைவில் பணக்காரனாகி விட்டான். அவனுக்கும் ஒரு நம் நாட்டில் திட்டங்களை செயல் படுத்த பிற நாடு ஒன்றுக்கும் . இந்த நாடு பின் தங்கியா நாடுகளை குறிவைத்து கடன் கொடுத்து திட்டங்களை கைப்பற்றுகிறது அந்த நாட்டுடன் அவனுக்கு தொடர்பு இருப்பதாக நான் அறிந்தேன். அதனால் அவனிடம் சேர்ந்தது கொமிசனாக அந்த நாட்டுப் பணம். அடிக்கடி அவன் அந்த தேசத்துக்குப் போய் வருவதுண்டு. எனக்குத் தெரியும் அவன் தன் பதவியைப் பாவித்து சேர்த்த பணம் அது என்று. அதோடு அவன் ஒழுக்கம் கேட்டவன். பல பெண்களோடு அவனுக்கு தொடர்புண்டு. அவனின் நிதி பற்றியும் பெண்களின் தொடர்பு பற்றியும் உன் மென்பொருள் திறமையை பாவித்து தகவல் சேரித்து தரவேண்டு. அதை தேர்தல் பிரகாரத்தின் போது பாவித்து நான் வெற்றி பெறுவேன்.அதோடு அவன் பணம் சம்பாதித்தான் என்று ஊழல் கொமிசனருக்கு என்னால் முறையிடமுடியும்”
“இப்பொது புரியுது சேர் உங்களுக்கு என்னிடம் என்ன உதவி தேவை என்று. இதை நான் செய்ய எனக்கு ஒரு மாத காலம் தேவை”
“ அது பரவாயில்லை . தேர்தல் இன்னும் ஆறு மாதத்தில் நடக்க இருக்கு. அதுக்கு முன் இந்த தகவல் எனக்குத் தந்தால் போதும் “

***
ஐந்து வருட கால முடிய சில மாதங்களுக்கு முன் பாரளுமன்ற தேர்தலக்கு வர்த்தகமானியில் அறிவித்தல் செய்யப் பட்டது . அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாயினர் . தேர்தலில் போட்டியிட காட்சிகுள் பேரம் பேசப்பட்டது . தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்கள் இருந்தன. இதுவரை தெரினியாகல தொகுதிக்கு பிரதேச சபயில் சாதாரன அங்கத்தினராக இருந்த முனசிங்காவுக்கு புதிதாக தோன்றிய் அரசியல் கட்சியில் அந்ப் பகுதியில் கருணாதாசவுக்கு எதிராகப் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தத் தொகுதிக்கு பாராளுமன்ற உறுபினராக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அமைச்சரான கருணாதாசவை வெல்வது சற்று கடினம் என்பது முனசிங்காவுக்கு தெரியும். கருணாதாசவை தேர்தலில் வெல்வதுக்கு அவரைப் பற்றிய அந்தரங்க தகவல் தெரிய வேண்டும். கருணாதாச ஊழல் செய்து சம்பாதித்த பணம் எவ்வளவு? வெளி நாட்டில் அவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்கின் விபரம், எவ்வளவு சொத்துக்கு அதிபதி, எப்போது அதை வாங்கியவர் அவர் தொடர்புள்ள பெண்களின் பெயர்கள் இப்படியான் விபரம் கிடைத்தால் அதை வைத்து கருணாதாசவுடன் பேரம் பேசி அவரை தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் செய்ய வைத்து அந்த தொகுதியில் போட்டி இன்றி வெற்றி பெற முடியும் என்பது முனசிங்காவின் நம்பிக்கை. அதற்கு தகவல் திருடும் தர்மாவின் திறைமையை முழுக்க முனசிங்கா நம்பி இருந்தார்.

****
தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் முனசிங்கவின் செயலளர் அவசரம் அவசரமாக அவரிடம் ஓடி வந்தார்;=,: :
“என்ன சில்வா பத்தோடு ஒட்டி வருகிறீர்.” என்ன விஷயம் சொல்லும்”?
“சேர் உங்களை தர்மா ஏமாற்றி விட்டான்”

“என்ன சொல்லுகிறீர் கெதியிலை சொல்லும். என்ன நடந்தது என்று”?
“நீங்கள் எனக்கு சொன்னபடி கருணாதாசவின் சேகரித் தகவல்களை தர்மாவிடம் எடுத்து வர கொழும்புக்கு போனேன். அவன் அங்கு ரூமில் இல்லை சேர் :

“எங்கே அவன். என் காடடையர் கும்பலுக்குத் தெரியாமல் அவன் எங்கும் போக முடியாதே”.,

“விசாரித்ததில் சிலர் சொன்னார்கள் அவனுக்கு வேலை கிடைத்து வெளி நாடு ஒன்றுக்கு போய் விட்டானாம்”.
”எந்த நாட்டுக்கு”?:
“அது அவர்களுக்குத் தெரியாதாம் சேர் “
”அதை நான் கண்டுபிடிக்கிறேன். கொழும்பில் இருக்கும் என் காடையர் குழு அதைக் கவனிக்கும்”

“ சேர் அதுமட்டுமில்லை உங்கள் வங்கியில் இருந்த பணத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துக் கொண்டு அவன் வேறு நாட்டுக்கு ஒடிப் போயிட்டான்”
“எப்படித் திருடினான் “?
“நீங்கள் அவனை நம்பி உங்களின் வங்கி கணக்கு விபரம் கொடுத்தீர்களா ?

“அவனை நம்பிக் கொடுத்தேன் அவன் செலவுக்கு பணம் எடுக்க . அதுக்கு இப்ப என்ன’’

“அந்த கணக்கின் பாஸ்வேர்ட் (Password) கொடுத்தீர்களா”?

“ அதை நான் கொடுக்கவில்லை “

“ஆனால் சேர் அவன் தர்மா பாஸ்வேர்ட்டை தன் திறமை மூலம் அறிந்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பெரும் தொகையான பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டான் “

“ உனக்கு எப்படித் தெரியும் “?

“ உங்கள் தேர்தல் விளம்பரங்களுக்கும் மற்றும் தேர்தல் வேலைகளுக்கும் நீங்கள் தந்த செக்கை மாற்ற போன பொது உங்கள் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று வங்கி மனேஜர் சொன்னார் சேர்”

முனசிங்கா அதிர்ந்து போனார் . தர்மா தன்னை ஏமாற்றுவன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை திருடன் திருடனையே திருடிவிட்டான் என்று வாயுக்குள் முணுமுணுத்தார்.

(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (28-Dec-18, 2:50 pm)
பார்வை : 136

மேலே