மனிதனாக

கடன் கார வாழ்க்கையை
மாற்ற வேண்டும்./
கடமையில் உயரவேண்டும் ./
கேள்விகளுக்கு விடை அளிக்க
வேண்டும் /
கேள்விகளைத் தொடுக்க வேண்டும். /

அன்பால் அணைக்க வேண்டும் /
அன்னை நாட்டிலும் தலை
குனியாது வாழவேண்டும். /
ஆற்றாமைகளை அழிக்க வேண்டும்./
ஆற்றலைப் பெருக்க வேண்டும். /

பொறுமை காக்க வேண்டும் /
பொது உடமைகளைப் பாது
காக்க வேண்டும். /
இன்னல்களை ஏற்றுக்க வேண்டும் /
இன்பத்திலும் நுழைய வேண்டும்./

தாழ்த்தப்படுவதில்
இருந்து மாறவேண்டும். /
தாழ்வு மனப்பாங்கை கை
விடவேண்டும்./

அழுவதற்காகவும் /
விழுவதற்காகவும் /
மண்ணில் மனிதனாகப்
பிறக்கவில்லை/
ஆழ்வதற்காகவும் /
வாழ்வதற்காகவும் /
மண்ணில் மனிதனாக நாம் உருவெடுத்தோம்./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (28-Dec-18, 4:36 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : manithanaaga
பார்வை : 93

மேலே