யுத்தம் - இரண்டாவது பகுதி

” எனக்கு ஏதாவது நேர்ந்து நான் திரும்பி வராவிடில் வேறு ஒருவரை மணம் செய்து கொண்டு நீ சந்தோஷமாக வாழ வேண்டும். “, என்று தன் காதலி மேரியிடம் கூறினான் ஜான்.
” உனக்கு ஒன்றும் ஆகாது. நீ திரும்பி வருவாய். உன்னோடு நீண்ட காலம் நான் சேர்ந்து வாழ்வேன். “,என்றாள் மேரி.
” நான் செல்வது யுத்தகளத்திற்கு. அங்கு எதுவும் நடக்கலாம்.
எதையும் எதிர்கொள்ள உன் மனதை தைரியப்படுத்திக் கொள். “,என்று மேரியிடம் கூறிவிட்டு கிளம்பினான் ஜான்.
ரெடியாகக் காத்திருந்த இராணுவ ஊர்தியில் ஏறினான் ஜான்.
ஊர்தி ஊர்ந்து நகர, மேரியின் கண்கள் ஜானையே பார்த்தபடி இருக்க டாட்டாக் காட்டிக் கொண்டிருந்தாள்.
அந்த இராணுவ ஊர்தி நேராக ஒரு இராணுவ முகாமிற்குச் சென்றது.
முகாமில் ஏற்கனவே இராணுவ வீரர்கள் குழு குழுவாகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஜானும் தன் உடைகளை மாற்றி தயாராகி தன் குழு நிற்கும் இடம் வந்தான்.
அந்த குழுவில் தனது கல்லூரி நண்பன் ஆசிக் இருப்பதைக் கண்டான்.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
அதற்குள் அந்த குழுவின் தலைவன், ” வீரர்களே! நம் நாட்டைக் காப்பதற்கு நாம் உயிரையும் தியாகம் செய்ய தயாராகுவோம்.
நம் நாட்டில் பிறந்த நாம் அனைவரும் சுத்தமான வீரர்களே என்பதை நம் எதிரிகளுக்கு நிரூபிக்கும் தருணம் இது.
வாழ்க நாடு!
பரவுக அதன் புகழ்!
“,என்று தன் உரையை நிறைவு செய்து வாகனத்தில் ஏற அனைவரும் அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள்.
ஜானும், ஆசிக்கும் அருகில் அமர்ந்திருந்தார்கள்.
தங்கள் கல்லூரி வாழ்க்கை ஞாபகங்கள் துளிர் விட,
ஆசிக், ஜானிடம், ” மேரி எப்படி இருக்கா? உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? “,என்று கேட்டான்.
” இல்லை நண்பா. இப்போது தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.
அதற்குள் போர் என்று அறிவித்துவிட்டதால் திருமணம் செய்யவில்லை.
இந்த யுத்தம் முடிந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மேரி எனக்காக காத்திருக்கிறாள். “,என்றான் ஜான்.
” உங்கள் திருமணம் நடைபெற அல்லா கிருபை செய்வாராக. “,என்றான் ஆசிக்.
” அப்புறம் ஆசிக்! உனக்கு திருமணம் ஆகிவிட்டதா? “,என்றான் ஜான்.
” ஆகிவிட்டது ஜான்.
இரண்டு பசங்க இருக்கிறார்கள்.
மூத்தவன் பாட்ஷா. முதல் வகுப்பு போறான்.
இளையவன் ரஹீம்.
எல்கேஜி போறான்.
என் மனைவி பாத்திமா. மிகவும் அன்பானவள்.
“,என்று சுருக்கமாகக் கூற, இராணுவ வாகனம் நின்றது.
வீரர்கள் எல்லாரும் இறங்கி குழுத் தலைவனை பின் தொடர்ந்தார்கள்.
மிகவும் இரைச்சலான பகுதியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்கள்.
எதிரில் மிக கோரமான காட்சியாய் யுத்தம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
சில குழுக்களாக செயல்பட்ட வீரர்கள் எதிரி இராணுவ பதுங்குக் குழிகளைக் குறி வைத்து தாங்கிக் கொண்டிருந்தார்கள்.
அது ஒரு மலையோர பகுதியாக இருந்தால் பாறைகளில் மறைந்து மறைந்து எதிரி படையினரை சுட்டு தள்ள,
எதிரி படையினர்களும் சளைத்தவர்கள் அல்ல.
மாறிமாறி சுட்டுக் கொண்டே இருக்க அவ்வப்போது வீரர்களின் மரணம் நிதர்சனம் ஆகிக் கொண்டிந்தது.
பிணங்களைத் தின்ன கழுகுகளும் ஒன்றுக்கொன்றுப் போட்டிப் போட்டு இரத்தம் குடித்தன.
மனித சடலங்களின் சதையை பிய்த்துத் தின்றன.
அல்லாவை வணங்கியபடி ஆசிக் எதிர்களைச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தான்.
ஜான் சற்று கொஞ்சம் தள்ளி சுட்டுக் கோண்டு முன்னேறினான்.
சிறிது நேரத்தில் அந்த இடத்தில் குண்டு மழை பொழிய ஆரம்பிக்க,
சில நிமிடங்களில் பாதிபேர் மாண்டார்கள்.
இதற்கு பதிலடியாக எதிர்க்கூட்டம் அழிக்கப்பட அந்த இடமே மேலும் கோரமானது.
ஜானின் வலது தோள்பட்டையில் அடிபட்டு இருந்தது.
அதனால், ஜானை மறைவான இடத்தில் அமர வைத்துவிட்டு ஆசிக் போர்க்குச் சென்றான்.
ஜான் சிறிது தளர்வாக உணர்ந்தான்.
அரைமணி நேரம் கழிந்திருக்கும். யாரோ வருவது போல் தெரிந்தது.
துப்பாக்கியைத் தடவி எடுத்துக் கொண்டான் ஜான்.
அதிக இரத்தம் வெளியேறியதால் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட ஆசிக் ஊர்ந்து வந்தான் தன் நண்பனிடம்.
வந்தவன் தன் கையில் இருந்த கை கடிகாரத்தை கழட்டிக் கொடுத்து தன் மனைவியிடம் கொடுக்கும்படி கூறிவிட்டு உயிரை இழக்கிறான்.
ஜான் தன் மேரியை நினைக்கிறான்.
அதோடு நண்பனின் இறுதிக் கட்டளையை நிறைவேற்றத் துடிக்கிறான்.
அந்த பகுதியே இருளுக்குள் மூழ்கிய நேரம்,
யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டான்.
சில நேரங்களில் விழுதலும் எழுதலுமாக ஒரு மருத்துவ முகாமை அடைந்தான்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் சாந்தி ஜானுக்கு மருத்துவ உதவியை அளித்தார்.
சில மணி நேரங்களில் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் நகர்ந்தான்.
தன் காதலி மேரியை அழைத்துக் கொண்டு,
நண்பன் ஆசிக்கின் ஊர் சென்றான்.
அங்கு பாத்திமா தன் கணவன் இறந்தது கூட அறியாமல் மகிழ்ச்சியாக பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஆசிக் கொடுத்த கைக் கடிகாரத்தைக் கொடுத்தான்.
அதைக் கண்டு கண்களில் நீர் சிந்த வாங்கிக் கொண்டார்கள் பாத்திமா.
அங்கிருந்து ஜான் கிளம்பத் தயாரான போது மூன்று சகோதரிகள் வந்து,
தங்கள் சகோதரன் போர்க்கு போனதாக கூறி அவனைக் கண்டீர்களா? என்று கேட்டபடி அவன் புகைப்படத்தைக் காட்டினார்கள்.
ஜானும் தான் காணவில்லை என்றுரைத்து அங்கிருந்து சென்றான்.
யார் அந்த சகோதரிகள்? முதற்பகுதியை படிக்கவும்
(தொடரும்…)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Dec-18, 11:16 am)
பார்வை : 186

மேலே