கலை ஞாயிறுக்கு சிலை

கலை ஞாயிறுக்கு சிலை

சிற்பிக்கு
எங்காவது
சிலை வைப்பார்களா?
ஆம்!
முதன்முறையாக
வைத்தார்கள்...
தமிழகத்தை
வடிவமைத்த
சிற்பிக்கு.

யார் சொன்னது
கலைஞர்
ஆலயங்களுக்கே
சென்றது இல்லை என்று?

வாழ்நாள் முழுதும்
அண்ணா அறிவாலயம்
சென்றவர் தானே
கலைஞர்!

அதனால் தான்
அண்ணாவின்
நினைவுகளோடும்
எண்ணங்களோடும்
வாழ்ந்தவருக்கு
அவரருகே
அங்கு பூவுடலும்
இங்கு சிலையும்.

கணிப்பொறிகள்
என்ன
செய்துவிடும்
இவரது
நினைவாற்றலுக்கு
முன்?

அதனால் தான்
எதிர்கட்சியினர்
என்றாலும்
புன்முறுவலோடு
அரவணைத்ததை
எண்ணி
மறக்காமல்
சிலையிலும்
புன்னகைக்க
வைத்தனர்
போலும்.

தமிழுக்கான
முதல் பல்கலைக்கழகமே
இவர் தான்.
இவர்
உரையையும்
உரைநடையையும்
உரைவீச்சையும்
போற்றாத புலவர்
இங்கு எவர் உள்ளார்?

நூற்றாண்டு
நூற்றாண்டுகளாக
வலியவர்களையும்
மகளிரையும்
முதுகு நாணற்றவர்களாக்கும்
முயற்சித்தவர்களுக்கு
எதிராய்
இவரது
எழுதுகோல் தானே
தாங்கியது!

இவரது
சாதனைகளை
அறிய
கூகுள் வலைகளை
சொடுக்கினால்
இன்றைய அரசியலர்
மலைப்பர்.

தமிழுக்கு
தமிழ்
எழுதிய
வரலாறு.

ஆளுமைகளுக்கே
வழிகாட்டிய
அரசியல்
ஆளுமை.

நிறம்
மதம்
சாதி
பாராத
தமிழ்
ஞாயிறு.

இயல்
இசை
நாடகத்தை
இணைத்த
கலை
இணையம்.

'உடன்பிறப்பு'
என்னும்
ஒற்றைச் சொல்லில்...
ஓரினம்
கண்ட
ஒற்றைச் சொல்.

திரை வசனங்களில்
தெறித்த
மாணிக்கப்பரல்களால்
கோபுரங்கள்
கூனிகுறுகின
என்றால்
மேடையில்
வீசிய
புயற்காற்றில்
வடவரின்
முதுகுநாண்கள்
முறிந்தன.

இது
தந்தைக்கு
தனயன்
செய்த கைம்மாறு
மட்டுமல்ல!
தமிழருக்கான
மைல்கல்.

பெரியார்
இனி
அண்ணா
கலைஞர்
வரிசையில்
தளபதி தான்
கட்டியம்
கூறிய
நாள்.

காலம் மாறிவிட்டது.
வடவர் வாழ்ந்து
தென்னவர்
தேய்ந்த
நாட்கள் எல்லாம்.

வடவர்
என்றாலும்
தென்னவர்
என்றாலும்
தேசத் தலைவனை
அடையாளம்
காட்டுவது
இனி
தமிழன்
மட்டுமே.

- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (31-Dec-18, 7:03 am)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 59

மேலே