தேரையர் ஜலவகைகளின் குணங்கள் 8 அருவி, கான்யாறு ,சிகப்பு ,கருத்த ,வயல் நிலத்தின் தண் ணீர் குணங்கள்

தேரையர் ஜலவகைகளின் குணங்கள் (8)
அருவி, கான்யாறு ,சிகப்பு ,கருத்த ,வயல் நிலத்தின் தண் ணீர் குணங்கள்

அருவி சலத்தின் குணம்

அருவிநீர் மேகம கற்றுசி லேஷ்மம்
வருவிக்கும் ரத்தபித்த மாற்றும் -பெருமிதமாம்
வேலை யுலகின் மிகுந்தபல முண்டாக்குங்
காலை மலர்முகத்தை காண் (37)

தாமரை மலரை நிகர்த்த முகத்தையுடைய பெண்ணே மலையருவி சலப்பிரமேகத்தையும் ரத்தப்பித்த ரோகத்தையும் விலக்கும் சிலேஷ்மத்தையும் தேகபலத்தையும் உண்டாக்கும் என்க

கான்யாற்று சலத்தின் குணம்

அடவிப் புனலா லதிசீதா திக்கம்
உடலிர் கனப்பிளைப்பு முண்டாம் - உடல்வயிறு
நாவில் விடம்வெலும்பும் கண்ணுந்த லைபாரந்
தாவில் வுடல்சுரமாந் தேர் (38)


கான்யாற்று சலத்தைக் குடிப்பவர்க்கு அதிக சீதளம் தேகபாரிப்பும் இளைப்பும் சரீரம் வயிறு நா ஆகிய இவ்விடங்களில் வெப்பம், தலைகனம் வலி சிலேஷ்ம சுரம் உண்டாகும்.

சிவந்த ஜலத்தின் குணம் விருத்தம்

காச பித்தத் தாற்காந்தி யுமேகிடும்
ஊச லுட்டின முட்சுரங் காந்தலாம்
காச தாதுங் கண்டிடு மென்றுரை
வாச மிற்சிவப் பாம்புனல் வண்மையே (39)


சிவந்தநிறத் தண்ணீரால் இருமலார்ப் பிறந்த பித்த உஷ்ணம் விலகும் சுரமும் எரிவும் விந்து நஷ்டமும் உண்டாகும் என்க

கருத்த சலத்தின் குணங்கள் வெண்பா

கறுத்த சலம்வா ருதிகரப்பான் காந்தல்
இறுத்தநெஞ்சி கட்டிரும்பல் லீளை - மறுப்புசுர
நீக்கரிய நெஞ்செரிப்பு நீள்தோஷந் தாகநளிர்
போக்கும னல்கொடுக்கும் போற்று.(40)

கருமை நிறத்தண்ணீரால் வாந்திக்கரப்பான் உஷ்ணம் எரிவு மார்புச்சளி காசம் சுவாசம் விடாச்சுரம் புளித்த ஏப்பம் சகல தோஷம் தாகம் நடுக்கம் ஆகிய இவைகள் விளக்கும் பசியைத்தரும் என்க

வயல் ஜலத்தின் குணங்கள் வெண்பா

மேகம்போந் தாகம்போம் வெட்டையுட னேசுரம்போந்
தேகங் குளிர்சியுற்று தேறுங்காண் சோகமெல்லா
ஆறு மிரத்தசய மாருநோய்க் - கோபமிக
மாறும் வயற்புனற்கு ரை (41)

நீரிழிவு என்கிற மேகம் நாவின் வறட்சி, உஷ்ணத்தால் வரும் வெட்டை நோய் மேலும் பலவிதமான சுரங்கள் போகும். உடல் உஷ்ணம் குறையும், ரத்த சோகை மாறும் சளியை நீக்கும், வாத கோபம் இவை போகும் என்க.

எழுதியவர் : பழனிராஜன் (2-Jan-19, 2:15 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே