காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமம் செய்க – நன்னெறி 6

நேரிசை வெண்பா

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகருமம் செய்யவே - ஓதுகலை
எண்இரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண். 6 - நன்னெறி

பொருள்:

கூறப்படும் பதினாறு கலைகளும் பொருந்திய நிலவு போன்ற முகத்தவளே!

இரண்டு கண்களும் ஒன்றையே பார்ப்பது போல, அன்பான கணவன் மனைவியும் ஒருமித்து தீதில்லாத ஒரு கருமத்தையே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-19, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 105

மேலே