ஆசை பேராசை
ஆசை ! பேராசை !!
***************************************
கூட்டை அடையும் குருவிகள் போலுடற்
கூட்டினுள் கூடிடும் ஆசைப் பறவைகள் !
கூட்டைக் கலைத்திடில் கூட்டம் கலையுமோ ?
கூட்டைவே றாக்கிடுமோ கூறு ?