இலக்கியத்தில் கவி அழகு

இலக்கியத்தில் கவி அழகு
************************************************
தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின்நம் ஆரூரன் நாம்அழைக்க
வாராநின் றான்அவனை மகிழ்ந்தெதிர்கொள்வீர் என
நீராரும் சடைமுடிமேல் நிலவணிந்தார் அருள்செய்தார் !

( சேக்கிழார் அருளிய பெரிய புராணம் ,(திருத்தொண்டர் புராணம் )
(தடுத்தாட்கொண்ட பகுதி )
பகிருதல் :=
இச்செய்யுளில் புனைந்த அழகை ரசித்தேன் . எல்லாமே அழகிற்குரிய சொற்கள் வரிகள்
தேர் ஒரு அழகு . அவ்வழகுத் தேர் ஓடும் வீதி ஒரு அழகு. அவ்வீதி அடங்கிய ஊர் (அரூர்
ஒரு அழகு . காதலில் ஆராத காதல் ஒரு அழகு .(ஆரூரன் நாம் அழைக்க ) தொண்டரை ஒரு
தலைவன் விரும்பி அழைப்பது ஒரு அழகு . . நீராரும் சடைமுடிமேல் நிலவணிந்தார் என்ற
வரியில் பயன்படுத்திய சொற்கள் அழகு . அரூரனை(சுந்தரர் ) மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்கிறார்
சேக்கிழார் மகிழ்ச்சியோடு எனச் சொல்லியதே அழகு .
இப்பகுதி செய்யுளினை படித்தபோது எனக்கு ஆர்வம் மேலிட்டது . அதற்கு மேலும்
பகுதிகளை படிக்க ஆவலெழுந்தது . இவர்களெல்லாம் (சேக்கிழார் ) தமிழ் இலக்கணம் யாரிடம்
பயின்றார்கள் . இல்லை இவர்களிடம் இருந்து தான் இலக்கணம் உருவானதா. யார் அறிவார்
எதுகை என்பது அவர்கட்கு முன்னாலும் இருந்ததா யார் அறிவார் . . இதைப்போல் பலபகுதிகள்
பெரியபுராணத்தில் அமைந்திருக்கின்றன . சரித்திரக் கதை ஆசிரியர் திரு சாண்டில்யன் போன்ற
பெரியவர்களும் இதன் தாக்கத்திற்கு உட்பட்டவர்களே என்பது என்னுடைய கருத்து

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் ( (5-Jan-19, 7:11 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 74
மேலே