அத்தனையும் முத்துக்கள்

உதிர்ப்பதோ தமிழ் முத்துக்கள்
தமிழோ செல்லத் தமிழ்
கொஞ்சுவதோ தேன் தமிழ்
அள்ளி அணைப்பது ஆனந்தத் தமிழ்
கிள்ளி நுகர்வதோ இன்பத் தமிழ்
எள்ளி நகையாடுவதோ உறவுத் தமிழ்
சோறூட்டுவதோ நிலவுத் தமிழ்
தத்தி நடை போடுவதோ அழகு தமிழ்
கைவீசி நடக்கையிலோ ஒய்யாரத் தமிழ்
பள்ளி செல்லும் வேளையில் கொஞ்சும் தமிழ்
பாடம் கற்பதோ பச்சைத் தமிழ்
வீர நடை போடுவதில் வீம்புத் தமிழ்
வீடு வந்து சேர்ந்தவுடன் மழலைத் தமிழ்
அம்மா அம்மா என்றழைப்பதிலோ ஆசைத் தமிழ்
அதிலும் அம்மா தருவதுமோ பாசத் தமிழ்
எத்தனை எத்தனை முத்துக்களை
நம் இதழ்கள் சிந்துகின்றது , தமிழ் தமிழ் தமிழ்
அத்தனையும் நம்இதழ்களில் தவழ்ந்து வர
தமிழ் தரும் வலிமையும் பெருமையும்
எவர் பெறுவார் இவ்வுலகில் /
தமிழன் என்ற அஞ்சா நெஞ்சுடன்
மங்கா தமிழ் கொண்டு
நெஞ்சம் நிமிர்ந்து வஞ்சம் தொலைத்து ,
கொஞ்சமும் அன்பில் சிறிதேனும் நஞ்சு கலந்திடா வண்ணம்
வாழ்வோம், வளர்வோம், வளர்த்திட முனைவோம் .

எழுதியவர் : பாத்திமாமலர் (6-Jan-19, 12:45 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 762

மேலே