சேக்கிழாரின் அழகிய வர்ணனை

சேக்கிழாரின் அழகிய வர்ணனை- - - -(திருத்தொண்டர் புராணம் - - - தடுத்தாட்கொண்ட பகுதி
*****************************************************************************************************************************

கற்பகத்தின் பூங்கோம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார் !
( நால்வரில் ஒருவரான சுந்தரரின் செயல் )

விளக்கவுரை :--
( திருவாரூரில் புற்றிடம்கொண்டவரை தரிசனம் செய்து சுற்றிவருகையில் அங்கு வந்த
" பரவை " யாரைப் பார்த்த பார்வையில் இவ்வாறு தனக்குள் வினவி அதிசயிக்கிறார் .)
இங்கு நான் காண்கின்ற இது (பரவையார் ) கற்பக மரத்தின் பூங்கோம்போ . கமானவன்
பெருவாழ்வாகக் கொண்ட பொருளோ , அழகு என்ற பொருள் செய்த புண்ணியத்தின்
பலனாக விளைந்த புண்ணிய விளைவோ , மேகத்தை மேலே சுமந்து கொண்டும் , வில்
குவளை பவளம் தாமரை நிலவு ஆகியவற்றையெல்லாம் அழகு பொருந்த அங்கங்களாய்
கொண்ட ஒரு பூங்கொடியோ , இல்லை இவற்றினுள் அடங்காத வேறொன்றோ என்று
முடிவு செய்ய முடியாத அற்புதமோ , சிவபெருமானின் அருளோ என்று வியப்படைகிறார்

இப்பகுதியில் என்னை கவர்ந்தது :==
சேக்கிழாரின் வர்ணனை . அழகுக்கு அவர் தரும் பல்வேறு முகங்கள் , பரிமாணங்கள்
படிக்கப் படிக்க தெவிட்டாத வரிகள் . இரண்டாவது வரியில் அடுக்குத் தொடராக
" புண்ணியத்தின் புண்ணியமோ " என்று வார்தையிட்டிருப்பது வர்ணனையில் ஓர் அழகு

எழுதியவர் : பகிர்ந்தது ( சக்கரைவாசன் (6-Jan-19, 8:05 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 68

மேலே