கலைந்து போன மேகங்கள்

கலைந்து போன மேகங்கள் எல்லாம்
என்னிடம் சொல்லாமல் சென்ற கவிதைகளே !
காதலில்லா இளைஞனின் கற்பனைக்கு வரியான என் மேகங்களே !

என் மேகங்களே பகலிரவு காணாது
தீட்டிய சிகரங்களா என்னெற்ற
ஓவியத்தை கொண்ட உன்னை
விழிமூடமால் நான் ரசித்து இருக்க.

எங்களுக்குள் வரும் விரக்தி ஒர் அழகு !
அந்த அழகில் ஒரு பயணம்
மண்ணில் மீது அல்ல விண்ணில் மீது.!

பறவைகளின் வானில் நானும் பறந்துவிட்டேன் இறகில்லா மனிதபறவையாய் !
இத்தனை நாளைய் தொலைவில்லா தூரத்தில் ரசித்தஉன்னைய்
முதன்முதலாய் என்அருகில்
உன் அழகை ரசித்திடவே

கைதொடும் தூரத்தில் என் அருகில்
நீ இருக்க
செயற்கை வானூர்தியின் கட்டுப்பாட்டில்
நான் இருக்க
இயற்கையான உன்னை தொட்டு அள்ளி
அழகு பார்க்கமுடியவில்லை
என் மேகங்களே.!

மண்ணில் என்னவள் அழகு
விண்ணில் மேகங்கள் அழகு !
இருஅழகு விண்ணிலும் மண்ணிலும்
என் நினைவுகளில் இருக்க
என்னவளும் நானும் கீற்றுப்படை
மேகமாய் இருக்க
எண்ணங்கள் எல்லாம் மேகமாய் என்னவளை நினைத்து இருக்க
வெண்புறாக்கள் தூது செல்லும்
என் மேகமே நீ இருக்க
என்கவிக்கு வரியான என் மேகங்களே !

என்னவள் வெயிலில் நடக்கையில்
கதிரவனை மறைப்பதும் நீயே !
என்னவள் மாரியில் நினைகையில்
மழையை தடுக்கும் வெண்கொற்றக் குடைகளும் நீயே !

புள்ளியில்லா ரங்கோலி
மேககோலமும் நீயே
என்னவள் சூடிடாத கீற்றுத்திரள் மேகபூவும் நீயே!

என்னவளும் நானும் பயணங்களில்
காற்றோடு காற்றாக நகர்வலம்
கொண்டவனும் நீயே !
என்னவளும் நானும் இரவுகளில்
வென்நிலா விண்மீன்களோடு
கண்ணாமூச்சியாடிட காவலனும் நீயே !

மின்னல்கள் வெட்டும் நாழிகையில்
மேகத்தின் கண்ணீராகிய மழையே
வானத்திற்கு நீ இல்லாமல் அழகில்லையே !

என்னவளும் அழகு ,
என்மேகங்களும் அழகு !
என்னவளுக்கு மேனி அழகு
வானத்துக்கு மேகம் அழகு !
என்னவளுக்கு கார்கூந்தல் அழகு
வானத்துக்கு கார்மேகம் அழகு !
என்னவளுக்கு வெண்ணிநிறடை அழகு
வானத்துக்கு வெண்மேகம் அழகு !

எங்களுக்குள் ஒளிந்திருக்கும்
மோகமும் அழகு
மேகவானில் ஒளிந்திருக்கும்
வானவில்லூம் ஆழகு !

என் உள்ளத்தில் இருக்கும் உன் நினைவுகளும் அழகு
வானத்தில் இருக்கும்
என் மேகங்களும் அழகு !

இருஅழகையும் ரசித்திடும் கணபொழுதில்
காலநிலை மாறிட
மேகமும் கலைந்திட
பயணமும் முடிந்திட
என்கவிக்கு வரிகளான
என் மேகங்களும் கலைந்துபோனது.!

கலைந்து போனது
என் மேகம் மட்டும் இல்லை
என்னவளின் நினைவுகளும்
( என்னவளும்) தான் ...!!!


அன்பரசு மணி

எழுதியவர் : அன்பரசு மணி (6-Jan-19, 11:05 pm)
சேர்த்தது : அன்பரசு மணி
பார்வை : 353

மேலே