மலருக்கும் மனம் இருந்தால்

மலருக்கும் மனம் இருந்தால்...

அண்மையை கேட்டேன் அடைக்கலம் தந்தாய்
ஆசையைச் சொன்னேன் ஆவலுடன் இணைந்தாய்
இதழ்களை விரித்தேன் இலைகொண்டு மூடினாய்
ஈன்றவள் போல் இன்புற்றேன் நாணித் தலை கவிழ்ந்தாய்
உயிர்பெற்று உணர்தேன் உயர்த்தி உலகைக் காட்டினாய்
ஊமையாகி மயங்கி நின்றேன் ஊடலுடன் ஆடினாய்
என் அழகில் கர்வித்தேன் என்னை விடுத்து விலகினாய்
ஏக்கத்தில் கண் கவிந்தேன் ஏமாறாமல் தலை நிமிர்ந்தாய்
மலர்களுடன் என்னை சேர்த்து மாலையாக்கி மாந்தர்
என்னைச் சூடிட என் வாழ்க்கை முடிந்ததை காண நீ வருவாயோ !!!

எழுதியவர் : கே என் ராம் (7-Jan-19, 5:19 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 40

மேலே