அக்கறை

அக்கறை (கவிதை)

ஐயிரண்டு திங்கள் அன்னை மணிவயிற்றில் இருந்தகாலை
அன்னையின் அன்பின் அக்கறை

மண்ணில் மழலையாய் உதித்தது முதல்
தந்தையின் பாசப்பிணைப்பின் அக்கறை

பள்ளிப் பருவத்தில் ஆசானின் கனிவுடன் கூடிய கண்டிப்பின் அக்கறை

நண்பர்களிடையே நயமான அக்கறை

பணியில் அமர்ந்ததும் பல சூழல் நடுவிலும்
செய்தொழிலில் அக்கறை

முனைப்பில் அக்கறை முன்னேற்றத்தில் அக்கறை

முதல் நாள் ஈட்டும் வருவாயில், உடன் வரும் செலவின்மேல் அக்கறை

வாழ்வில், வழிகாட்டுதலில், அனைத்திலும்
அக்கறை! அக்கறை!

இல்லறம் புகுந்தநாளில் குடும்பத்தில் அக்கறை

என் நாடு, என் தேசம், என் மக்கள்
இன்னும் பலவற்றிலும் அக்கறை

நாம் மழலையாய் இருந்ததைப் போல்
நம் மழலையின் மீதும் அக்கறை

சிந்தையில் அக்கறை, செயலில் அக்கறை

உறவினர் மேல் அக்கறை, உடலின் மேல் அக்கறை

இறுதியில் வாழ்நாள் முடிவிலும்
பிறருக்கு பாரமின்றி வாழவேண்டும்
என்பதில் அக்கறை

என்னே அக்கறையின் உயர்வு!

காப்போம் எதனையும், எங்கும், அக்கறையுடன்!

வாழ்வோம்! வாழ்விப்போம்!

நன்றி,

அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி,
தமிழசிரியை,
கோயம்புத்துர் -22.

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (7-Jan-19, 8:56 am)
Tanglish : akkarai
பார்வை : 918

மேலே