சின்ன செய்திகளும் வியாக்கியானங்களும்

சின்ன செய்திகளும் வியாக்கியானங்களும்

“”இங்கு பிச்சைக்கார்ர்கள் கிடையாது"
ஒட்டிய நோட்டீஸ் அருகில்
குரங்குகள் கூட்டம்
மனிதனின் கையை எதிர்பார்த்து

“குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம்”
நோட்டீஸ் வீசி சென்றான்
சிறுவன் ஒருவன்

“லஞ்சம் தவிர்”
அலுவலக வாசலில் மட்டும்

“அதிகாரியை போலீஸ் சுற்றி வளைத்தனர்”
அவர்களுக்கு பாதுகாப்பு கோரி !

“இயற்கையை வென்றுவிட்டோம்”
இரண்டு நாட்களில் புரட்டி போட்டது
மழையும் காற்றும்

கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும்”
அறிவித்த மந்திரியை
கவலையுடன் பார்த்தார்
முன்னாள் தொழில் நண்பர்

“நாளை முதல் குடிக்க மாட்டேன்”
சத்தியம் செய்தான் மனைவியிடம்
எல்லாவேலைகளும்
முடிந்தபின் குடிக்கலாம்
மனதில் நினைத்து

“காய்கறி விலை ஏற்றம்”
கவலை வேண்டாம்
நாளையே மாறும்
மனிதனின் வாழ்க்கை போலே !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Jan-19, 12:50 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 47

மேலே