புதுப்பொங்கல் பொங்கும் பெண்ணாள்

========================================
சிலைபோல்மிக வெழிலோடுள சிறுதாவணிப் பூவே
=சிறையாயுள தடைதாண்டிட சிலவேளையில் நெஞ்சில்
அலைபொலெழுங் கனவாயிர மதுவாழ்வினில் கூட
=அரும்பாடுகள் படுநீயது அழகாய்கரஞ் சேர
விலைபோகிற பொருளாயுனை விருந்தாக்கிட எண்ணி
=விளையாடிடும் விருந்தாளிகள் விரைந்தேதின மோட
கொலைவாளது விழியாயுள குலமாதென வாழ
=கொடும்பாவிக லருகேவர குறும்பார்வையில் வீழ்த்து
**
எதுவாழ்வினில் நிசந்தானென இதுநாள்வரை காணா
=எதுவோவுனை இதுதானென இடமாறிட வைக்கும்
அதுவேயுன தறியாமையை அழகாய்படம் போட்டு
=அனல்மீதொரு புழுவாயுனை அலைமோதிடச் செய்யும்
இதுதானது எனநீயதை எளிதாகவ றிந்து
=எடைபோட்டிட முடியாநிலை இயல்பாகிடு முன்னே
பொதுவாழ்வெனும் புதுப்பானையில் புதுப்பொங்கலும் பொங்கிப்
=பொறுப்போடுடன் பரிமாறிடு புவிமீதினிற் பெண்ணே!
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Jan-19, 1:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 91

மேலே