தொலைந்த நொடிகள்

தொலைந்து போனது
என் குழந்தை பருவம்
தொலைந்து போனது
என் பள்ளி பருவம்
தொலைந்து போனது
என் தோழிகளின் குரல்
தொலைந்து போனது
என் ஆசைகள்
தொலைந்து போனது
என் இளமை
தொலைந்து கொண்டே
அனைத்தும் இருக்க
இன்றைய பொழுதையும்
கழிக்கின்றேன்.....
இரவின் மடியில்......
கண்களை மூடி துயில் கொண்டு...
கனவோடு ஒரு நொடி
தொலைந்த நிகழ்வில் கைகோர்த்து
பயணித்து..
தொலைத்தேன்....
அந்த நொடிகளையும்.......

எழுதியவர் : உமா மணி படைப்பு (9-Jan-19, 11:21 pm)
Tanglish : tholaintha nodigal
பார்வை : 498

மேலே