காதல் கஸல் துளிகள்

===============*
இரவில் மலரும் கனவுகள் எனக்கு
இனிய பள்ளிக் கூடங்கள் ஆகின்றன
உன் மௌனங்கள் மட்டும் அங்கே
மொழிபெயர்ப்பு செய்யும் பாடங்கள் ஆகின்றன.
**
எதுவும் எழுதாத இதயப் புத்தகத்தை
கண்வழியே சற்று அனுப்பி விடு
என்னைப் படிக்கும் காதல் அப்பியாசம்
அதிலே எழுதி அனுப்பி வைக்கிறேன்
**
எப்போதும் நன்றாக உறங்கும் பழக்கம்
ஏற்படுத்திக் கொள்ளல் உனக்கு நல்லது
தடையில்லா கனவில் வளரும் காதலில்
நீஎனைக் காண்பது எனக்கும் நல்லது
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Jan-19, 2:18 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 94

மேலே