காலம் காட்டும் பாதை

காலம் காட்டும் பாதை
கவலை என்ன நம்மில்..
கலக்கம் எல்லாம் பொய்மை-இவை
மனதின் மயக்கம் அன்றி என்ன?

வேலம் நிறைந்த ஏரி
முட்கள் நிறைந்த நிலம்தான்..
பேராசை நிறைந்த உள்ளம்
வேதனை நிறைந்த நிலைதான்..

வாழை போல துன்பம்
எழுந்து விழுந்து எழுந்திடும்..
பேதை போல நாமும்
பிதற்றி பிதற்றி வாழ்தல்

அறியாமை அன்றி வேறென்ன..அதை
அறிந்தாலும் நாம் உணர்ச்சி மலைதான்..
அட அழகு வாழ்க்கை நமது .தினம் காலத்தை
அள்ளி பருகு..பின் வசமாகும் அது நமது ..

எழுதியவர் : வெங்கடேசன் (11-Jan-19, 8:22 am)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 210
மேலே