தேர்தல் கண்காணிப்பு----------------அரசியல், சுட்டிகள், விமரிசகனின் பரிந்துரை--------------April 3, 2016 படித்தது --------2019 மீண்டும் நினைவு கொள்வோம்

அ.மார்க்ஸ் அவர்கள் தன் இணையப்பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். முக்கியமான அரசியல் நகர்வு இது. இதைப்போல பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களை மக்கள் உருவாக்கியாகவேண்டும். தேர்தல்கள் முறையாக நிகழ்வதென்பதே ஜனநாயகத்தின் தேவை.. ஜனநாயகமே வன்முறையற்ற சமூகச்செயல்பாட்டுக்கான ஆதாரம்



1

TN Election Watch – 2016
“””””””””””””””””””””””””””””””””””
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது (2014) தேர்தல் கண்காணிப்புக் குழு ஒன்று அமைத்துத் தேர்தல் அறிக்கைகள் தொடங்கி, வேட்பாளர்கள் சொத்துவிவரம், அவர்கள் செலவினங்கள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா, வேட்பாளர்களின் சாதி அவர்களின் தேர்வுகளில் எந்த அளவிற்குக் காரணமாகியுள்ளது, தேர்தல் கணிப்புகளின் பின்னணி, ‘நோடா’ செயல்பட்ட விதம், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் தொடர்பான விவாதம், வாக்களிப்பு விவரங்கள், தேர்தல் முடிவுகள் முதலியனவற்றை இயன்ற அளவிற்கு ஆய்வு செய்து ஒரு நூலாகக் கொணர்ந்தோம். ‘உயிர்மை’ பதிப்பகம் அதை வெளியிட்டது.

நான், சுற்றுச் சூழல் ஆர்வலர் திரு.சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் முதலானோர் தவிர பிறர் அனைவரும் இளம் பத்திரிகையாளர்கள். பல்வேறு கருத்துநிலைகளையும் கொண்டவர்கள்.

நாங்கள் பெரிய அளவு திட்டமிட்டிருந்தாலும் அதில் 25 சத அளவுதான் நிறைவேற்ற முடிந்தது. எனினும் அது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம். நாங்கள் உடனடியாக அந்த நூலைத் தயாரித்திருந்தாலும் அது வெளி வருவது தாமதமாகியது அதன் முக்கியத்துவம் உணரப்படாமல் போனதில் முக்கிய பங்கு வகித்தது. சொல்லப்போனால் தேர்தல் அறிவிப்பு வந்த கணம் தொடங்கியே எங்கள் வேலையைத் தொடங்கினோம். தேர்தல் அறிக்கைகளைக் கட்சிகள் வெளியிட வெளியிட உடனுக்குடன் அவற்றின் சுருக்கங்கள், ஒப்பீட்டு அட்டவணைகள் ஆகியவற்றை வெளியிட்டுக் கொண்டே இருந்தோம்ளெனினும் புத்தகமாக வெளிவருவதில் ஏற்பட்ட தாமதம் சோர்வைத் தந்தது.

எனினும் அந்தச் சோர்வையும் மீறி இம்முறை மீண்டும் பணியை இன்று துவங்கியுள்ளோம். இளம் பத்திரிகையாளர்கள் சுமார் 10 பேர் இன்றைய சந்த்திப்பில் பங்குபெற்றனர். இன்னும் சிலரும் வர உள்ளனர். சென்ற முறை கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் பல திருத்தங்களுடன் இம்முறை அந்தப் பணியை முடிப்பதாகத் திட்டம். முன்னாள் தேர்தல் அதிகாரிகள் சிலரிடம் சில குறிப்பான தலைப்புகளில் நேர்காணல்கள் செய்து அவற்றையும் நூலில் சேர்ப்பதாகத் திட்டம்.

இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு ஏப்ரல் இரண்டாம் வாரம் நடைபெறும்.

நமது தேர்தல் முறையில் ஏராளமான பிரச்சினைகள், ஊழல்களுக்கான வழிகள் இருந்தபோதிலும் 70 ஆண்டுகளாக இங்கு முறையான தேதிகளில் தேர்தல்கள் நடந்து, அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களும் நடந்துகொண்டுள்ளன. தேர்தல் மூலமான மக்கள் பங்கேற்புடன் கூடிய அரசுமுறை என்பதுதான் இன்று சாத்தியம் என்றாகிவிட்ட நிலையில் அதை முறைப்படி செயல்படுத்தும் பொறுப்பை அரசிடமும் அதன் ஓர் அங்கமான தேர்தல் ஆணையத்திடமும் மட்டும் விட்டுவிட்டு நாம் வாளாவிருக்க இயலாது. நமக்கும் அதில் பொறுப்புள்ளது.

அந்த வகையில் இந்தச் சிறிய முயற்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம். நீங்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறோம். இம்முறை மாவட்ட அளவுகளிலும் பிரதிநிதிகள் ஏற்படுத்தவும் முயற்சிக்கிறோம். TN Election Watch 2016 என ஒரு முகநூல் பக்கமும் உருவாக்கவும் உள்ளோம். எங்களுடன் சேர்ந்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி நடுநிலையாக நின்று இந்தப் பணியைச் செய்ய உங்களின் ஒத்துழைப்பும் தேவை.











ஜெ
மின்னஞ்சல்
April 3, 2016

எழுதியவர் : (11-Jan-19, 6:06 pm)
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே