உன்னோட உருவம் விழியோரம்

விழியோரம் என்றும் உன்னோட உருவம் - அதனால்
தினந்தோறும் கண்டேன் தெய்வீக எண்ணம்
கணம் தோறும் உன்னை காண வேண்டி மனதும்
நினைக்குதடி பெண்ணே நித்தம் நீ வருவாயோ …

பிழிந்தெடுத்த கரும்பாய் என்னோட உடலும்
பிரிவினாலே இன்று துரும்பச்சே செல்லம் - மல்லி
அரும்பு போன்ற அழகு உருவான பெண்ணே
அனுதினமும் என் முன் அணிவகுக்க வேண்டும்….

ஒன்றாக வேண்டும் உன்னோடு நானும்
பொன்னாக மாறும் நம் வாழ்க்கை நாளும் - இசையில்
இல்லாத சுரத்தை உருவாக்க வேண்டும் - அதற்கு
இல்லாளாய் நீ தான் என்னோடு வேண்டும் …
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Jan-19, 6:07 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 428

மேலே