முதுமொழிக் காஞ்சி 73

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை யெளிது. 3 எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப் பிறனொருவன் வேண்டுவதைக் கொடுத்தல் எளிது.

பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை விரும்பிக் கேட்டாலும் எளிதிற் கொடுப்பர்.

'ஈரமுடைமை ஈகையி னறிப' (II - பத்து) என இந்நூலில் வருகின்றது.

'அன்பிலா ரெல்லாம் தமக்குரியர்: - அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.' - திருக்குறள்.

'நாமம் வெய்யோர்க்கு நசைகொடை எளிது' - 'நாமம் வெய்யோர்க்கு நசைகுலை வெளிது' - பாடபேதங்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-19, 8:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே