பொங்கலோ பொங்கல் பொங்குக மங்கலம்

உழவர் திருநாள், சூரியத் திருநாள், பொங்கல் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் பொங்கல் திருநாள், இந்தியாவின்பழமையான திருவிழாக்களில் முதன்மையானது.

தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல்பண்டிகைக்கு உண்டு. முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள்திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை எப்போது முதல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை உறுதியாக கூற முடியாத அளவுக்குஇதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது.

சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து பல குறிப்புகள் உள்ளதால், இது சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டுவருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். பரிபாடல் எனப்படும் சங்க இலக்கியத்தில், பொங்கல் குறித்த பல பாடல்கள்,குறிப்புகள் உள்ளன.


வேத காலத்திற்கும் முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது, அத்திருநாளின் தொன்மையைவிளக்குவதோடு, தமிழர்களின் பண்பாடு எவ்வளவு ஆழமானது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களின் தனிப் பெரும்திருநாளான பொங்கல், மதச் சார்பற்ற ஒரு பண்டிகை, தமிழ் இனத்தின் திருநாள்.

பொங்கல் பண்டிகையின் இன்னொரு சிறப்பு, தமிழ் மாதங்களில் தலை மாதமான தை மாதத்தின் பிறப்பு. தைத் திங்களில்தொடங்கும் எதுவும் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை தமிழர்களின் மனதில் காலம் காலமாக வேரூண்றி விட்ட ஒன்று. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே அதற்கு நல்ல சான்று.

தை மாதப் பிறப்பில் அறிவியலும் ஒளிந்துள்ளது. சூரியனுடைய முழுச் சுழற்சியும் தென் கோடியில் முடிந்து, திரும்பவும் வடக்குநோக்கி நகரும் காலத்தை உத்தராயணம் என்பார்கள். அந்த உத்தராயணத்தின் தொடக்கம்தான் தை மாதம்.

போகி:

பொங்கல் பண்டிகையின் மூன்று நாள் விழாவையும் குறித்து விரிவாகப் பார்ப்போம் ...

முதலில் போகி ....

பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற தத்துவத்தை விளக்கும்வகையில் போகி கொண்டாடப்படுகிறது. இதுநாள் வரை உபயோகித்து வந்த பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி புதியபொருட்களுக்கு வரவேற்பு அளிப்பது தமிழர்களின் போகி சம்பிரதாயம். இப்படித் தீயிட்டுக் கொளுத்துவதற்கு சொக்கப்பனைஎன்று பெயர்.

தை மாதப் பிறப்பை புத்துணர்வுடன், புதுப் பொருட்களுடன் வரவேற்கும் நிகழ்வாகவும் போகி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், பழைய பொருட்களுத்து தீயிட்டு, மேளமடித்து அதை சுற்றி வந்து, பழையன கழியட்டும், புதுவாழ்வு மலரட்டும்என்று இறைவனை வேண்டி வணங்குவர்.

போகிக்கு இன்னொரு கதையும் உண்டு. மழை தரும் வருண பகவானின் மறுபெயர் போகி என்பதாகும். நல்ல மழை தந்து,விவசாயத்தை செழிப்பாக்கி, உழவர் பெருமக்களின் மனதில் உவகை பொங்க உதவிய வருண பகவானை வணங்கும்விதமாகவும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஒரு வரலாறு உண்டு.

பொங்கல்:

அடுத்து பொங்கல் ..

தைத் திங்களின் முதல் நாள். தலைத் தமிழ் மாதத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீடுமுழுக்க சுத்தம் செய்து, புதுப் பானையில், அறுவடை செய்த புது நெல்லைப் போட்டு பொங்கல் வைப்பர் இந்த நாளில்.
புதுப்பானையில் இட்ட புத்தரிசி பொங்கி வருவதைப் பார்த்து பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்றுபாடி, குலவையிட்டு மகிழ்ச்சி அடைவர் தமிழ் மக்கள்.

இப்படிப் பொங்க விடுவதால்தான் பொங்கல் என்ற பெயர் ஏற்பட்டதாம். நன்கு பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு முழுவதும்வீட்டிலும் சந்தோஷம் பொங்கி வழியும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் உள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பு வாசலில், அரிசி மாவால் கோலமிட்டு அலங்கரிப்பர். அரிசி மாவுக் கோலம்இடுவதற்கு முக்கியக் காரணம், எறும்பு போன்ற சிற்றுயிரினங்கள் அதை சாப்பிட்டு நம்மை வாழ்த்திச் செல்லும் என்பதால்தான்அரிசி மாவால் கோலமிடுகிறார்கள்.

படைக்கப்பட்ட பொங்கலை நம்மைக் காக்கும் தெய்வங்களுக்குப் படையலிட்டு பின்னர் குடும்பத்தோடு உண்டு மகிழ்வதுவழக்கம். பொங்கல் பண்டிகையின் நாயகனே சூரிய பகவான்தான். எனவே பொங்கலை வீட்டுக்குள் வைக்காமல், வெட்டவெளியில், படைப்பதே சிறந்தது.


பொங்கல் பண்டிகையுடன் இணைந்த மற்றொரு சிறப்பு கரும்பு. இந்திரனின் கரும்பு வில்லை நினைவு கூறும் வகையிலேயேகரும்பு பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளதாக ஒரு செய்தியும் உண்டு.

மாட்டுப் பொங்கல்:

மாட்டுப் பொங்கல் ..

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையில் அந்த உழவனுக்கு உற்ற துணையாக விளங்கும் மாடுகளைக் கவனிக்காமல்விடலாமோ? அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து, வருடமெல்லாம் கடுமையாக உழைத்து, நமது உயர்வுக்கு உழைக்கும் மாடுகள்அன்று நன்கு குளிப்பாட்டப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசி, புதுக் கயிறு கட்டி, பொங்கலிட்டு அதை மாடுகளுக்குப் படைப்பர்விவசாயிகள்.

மாடுகளுக்கு பூஜையும் நடத்தப்படும். இதற்கும் ஒரு கதை உண்டு. சிவபெருமான் தனது வாகனமான பஸவா எனப்படும்நந்தியிடம், நீ பூலோகத்திற்குச் சென்று, மக்களிடம், தினமும் எண்ணெய் குளியல் எடுத்து, மாதம் ஒரு முறை சாப்பிடும்படி கூறுஎன்று அனுப்பி வைத்தாராம்.

ஆனால் நந்தியோ அதை மாற்றி தினசரி சாப்பிட்டு, மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்கும்படி கூறி விட்டதாம்.இதனால் கோபமடைந்த சிவபெருமான், என் பேச்சை கேட்காத நீ, பூலோகத்திலேயே இருந்து மனிதர்களின் விவசாயப்பணிகளுக்கு உழைத்து அங்கேயே இரு என்று சபித்து விட்டாராம்.

இதனால்தான் காளை மாடுகள், விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த ஐதீக செய்தி கூறுகிறது.

ஜல்லிக்கட்டு:

மாட்டுப் பொங்கலுடன் இணைந்த மற்றொரு விசேஷம் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல். அந்தக் காலத்தில் ஏழு தழுவுதல்என்று அழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும் ஒரு தனிப்பெரும் வரலாறு உண்டு.
அந்தக் காலத்தில் கன்னி ஒருவளை மணம் முடிக்க விரும்பும் ஆடவன், ஜல்லிக்கட்டு காளையை அடக்கியாக வேண்டும். அப்படிகாளையை அடக்கும் காளைக்குத்தான் தங்களது பெண்களை அந்தக்கால தந்தையர் மணம் முடித்துக் கொடுப்பார்களாம்.இதற்காகவே வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்படுமாம்.

தமிழர்களின் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. இன்றும், தமிழக கிராமங்களில் எந்த விசேஷம், திருவிழா நடந்தாலும்ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுவதைக் காணலாம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் இதில் வெகு பிரபலம். காரணம்,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு உள்ள பல வரலாற்றுச் சிறப்புகள்.

குக்கர் பொங்கல்:

இப்படி பொங்கலுக்கு தனிப் பெரும் வரலாறுகள் இருந்தாலும் இன்று குக்கர் பொங்கல், ஹோட்டல் பொங்கல் என்று நமதுஇனத்தின் பாரம்பரியம் சுருங்கி, மாடர்ன் ஆகி விட்டது.
இருந்தாலும் பொங்கல் பண்டிகையின் இனிமை, சிறப்பு குன்றுமணியளவு கூட குறையாமல் தமிழர்களின் மனதில் இது தங்களதுதிருநாள் என்ற பெருமிதத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தத் தவறவில்லை என்பதே பொங்கல் திருநாளின் தனிச் சிறப்பு.

புது நெல்லைப் புடைத்து

புத்தரிசி ஆக்கி,

புதுப்பானையில் இட்டு

சர்க்கரையும், வெல்லமும்

சங்கமிக்க,

பொங்கல் அது பொங்கி வர,

குடும்பத்தோடும், சுற்றத்தோடும்

குலவையிட்டு, குதூகலிக்க

பொங்கலைக் கொண்டாடுவோம்!


பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

- சுதா அறிவழகன்


Oneindia

எழுதியவர் : (12-Jan-19, 9:00 pm)
பார்வை : 67

மேலே