அம்மாவின் கை வண்ணம்

அதே இலை
அதே சாப்பாடு
அதே பொரியல்
அதே கீரை
அதே கூட்டு!

சமைத்த நெஞ்சம்
பரிமாரும் கை
மட்டுமே மாற்றம்!

இதயம் நனைந்து
சாப்பிட்டு எழுந்ததும்
கைழுவ தண்ணீர்
எடுக்குமுன்
இரு சொட்டு விழுந்தது
கண்களிலிருந்து!

எழுதியவர் : ரகுஸ்ரீ (12-Jan-19, 10:33 pm)
சேர்த்தது : ரகுஸ்ரீ
Tanglish : ammaavin kai vannam
பார்வை : 136

மேலே