பொங்கல் இது பொங்கல்

பொங்கல் இது பொங்கல்
********************************************************
பொங்கலிது பொங்கல் மக்கள் மகிழ்ச்சியில்
பொங்கலிது பொங்கல் மஞ்சளோடு இஞ்சியும்
தங்கிடும் மங்கலமாய் குடும்பம் முழுவதும்
பொங்கிடும் பொங்கல் மண்பானைப் பொங்கல்

இனித்திடும் கரும்பினை சோகையுடன் வைத்து
கனிவான கதிரவனை இல்லத்தே அழைக்கும்
பொங்கலிது பொங்கல் பாலோடு பொங்கிடும்
பொங்கலிது பொங்கல் திருவிழாப் பொங்கல்

மாட்டுக்கு பொட்டிட்டு கொம்புக்கு வண்ணமிட்டு
அட்டிகையாய் பாசிமணி மாலைகள் அணிவித்து
மட்டற்ற மகிழ்ச்சிக்கு அதற்கும் ஓய்வளித்து
கட்டவிழ்த்து பொங்கலிட்டு காலாற ஓடவிட --மனம்

பொங்கும் பொங்கலிது மகிழ்ச்சிப் பொங்கலிது

எழுதியவர் : சக்கரைவாசன் (14-Jan-19, 9:13 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 39

மேலே