காதல் வாழ்க

காதலித்தவனையே
கல்யாணம் செய்யும்
பாக்கியம் எத்தனை
பெண்களுக்கு ...?

நீ மட்டும் இதற்கு
விதி விலக்கா என்ன...?
காதலில் புரையோடின
புண்ணிற்கு நினைவுகள்
மட்டுமே அருமருந்து...

நீ கல்லூரி வளாகத்தில்
இருந்து கைப்பேசியில்
பேசும் போதெல்லாம்
நானுமல்லவா இங்கே
கல்லூரி காளையானேன்..

நீ தடுக்கி விழுந்து
தண்டு வடத்தில் அடி
என்று சொன்ன போது
நானுமல்லவா இங்கே
துடிதுடித்து போனேன்..

இப்போது உன் மௌனம்
உனக்கு திருமணமாகி
விட்டதென்று நீ அனுப்பிய
அழைப்பிதழ் என்று நான்
அறியாமலா போவேன்...

காதலின் உச்சமே
தியாகம் என்பது தானே..
நினைவுகளால் வாழும்
நான் இது கூட தெரியாமலா
உன்னை காதலித்தேன்..

காதல் வாழ்க...!!!!

எழுதியவர் : ஜெய் ரெட்டி (14-Jan-19, 11:56 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : kaadhal vazhga
பார்வை : 68

புதிய படைப்புகள்

மேலே