ஐரோப்பியரின் ஆளுமைக்கு உட்பட்டு

ஐரோப்பியரின் ஆளுமைக்கு உட்பட்டு - நம்
அழகுபெற்ற ஆடவரும் பெண்டீரும் வேலைக்கு
அடிமையாய் ஆனதன் காரணத்தால் - அவர்களின்
ஆண்மையும் பெண்மையும் அகன்று - இன்று
ஆனதோ நிலைதான் பரிதாபம் !

அதனையும் அவர்கள் தான் மதிக்காமல்
ஆயிரமாயிரம் பொருளீட்ட நினைத்ததால்
அல்லும் பகலானது பகலும் அல்லானதே எதார்த்தம்
நம் செல்லத்தால் செழிப்புற்ற செல்வங்கள் - அங்கு
செல்லறித்த சேலைபோல் வாழ்வதும் சிறப்புதானோ!

தாயோ தந்தையோ தாரமோ தவ புதல்வரோ
எவரேனும் இயற்கை எய்தினாலும் - ஐரோப்பியன்
இசைவை பொறுத்தே சிதைக்கே தீ மூட்டும் நாளை
தேவையானோருக்கே தெரிவிக்க முடியும் - இந்த
அதி பயங்கர நிலை அஸ்தமாகும் நாள் என்றோ !

தமிழனாய் கன்னடனாய் தெலுங்கனாய் என்றாலும்
கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை முறை எவற்றையும்
பண்டிதம் செய்யும் இடத்திலே ஐரோப்பியன் உள்ளான்
நீ கெட்டிட கெட்டிட அவன் உயர்வான் உனை ஆள்வான்
பழாய் போகுமுன் மாறிடு தாழ்மையுடன் சொல்கிறேன் நீ கேளு.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Jan-19, 12:20 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே