தூது போ வெண்நிலவே

ஏனென்று தெரியாமல்
இன்னதென்று
புரியாமல்.....
மையல் கொண்டேனே
அவன்மேல் ....
என் இருவிழியே
எழுதுகோளென....
அதில் வெளிப்படும் கண்ணீரே....
எழுத்துக்களென....
பொன்னிற வெண்நிலவே
உனையே
காகிதமென
கொண்டு நான் வரையும்
மடல்.....!!
என்னவன்
என் உயிரில்
கலந்த பொன்னவன்
திசை நோக்கி
தூது போ வெண்நிலவே....
கண்ணீர் துளியின்
எழுத்துக்களை
அவன் விழிகள் பார்க்க
மெய்க்காதலை
உணர்த்திடு ....
வெண்நிலவே.....!!!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (14-Jan-19, 1:00 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 123

மேலே