ஐடி துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 59

ஐ.டி ஊழியர்களை, திருமணமானவர்கள் , திருமணமாகாதவர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து
கொள்ளலாம் .

முதலில் , திருமணமாகாதவர்கள் எப்படியெல்லாம் பொழுது போக்குகிறார்கள் என்பதை பார்க்கலாம்.



சனி காலை கிளம்பி ஞாயிறு மாலை திரும்புமாறு குட்டி ஜாலி டிரிப் .

ஸ்டர்ர் ஹோட்டல்களில் டிஸ்கோ.

ஆண் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் மது கொண்டாட்டம்.

ஆண்-பெண் நண்பர்கள் கலந்துகொள்ளும் ஜாலி மீட்டிங்.

ஆண் -பெண் நண்பர்கள் கலந்துகொள்ளும் இரவு பார்ட்டி.

டேட்டிங் மற்றும் செக்ஸ்.

தனியே மது மற்றும் பிற போதைகள்.

இத்தகைய பொழுதுபோக்குகளில் , உடன் பணிபுரியும் நண்பர்கள் அல்லது வேறு ஐ.டி நிறுவனங்களில் பனி புரியும் ஊழியர்கள் மட்டுமே ஒன்று சேர்கிறார்கள். இதன் மூலமாக ஐ.டி ஊழியர்கள், அவர்களது வட்டத்தை விட்டு வெளியே வருவதில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம் .

இப்படி அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நபர்களோடே பொழுதை கழிப்பது , எதை அவர்கள் மறக்க நினைக்கிறார்களோ அதையே ஞாபகப்படுத்துவதாக அமையும் .

ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள்தான் ஒன்று சேர்கிறார்கள் என்பதால் , அவர்கள் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வியே , புராஜெக்ட் முடிசுட்டியா …இல்ல இழுக்குதா என்பதாகத்தான் இருக்கும் . ஏன் அடுத்த புராஜெக்டை பழைய கம்பெனிக்காரன் தர மாட்டேன்னு சொல்லிட்டான் தெரியுமா என்று ஆரம்பிக்கிற பேச்சில் அலுவலக விஷயங்கள்தான் அலசப்படுகின்றன.

அலுவலக நபர்களோடு இருப்பதாலும் , அலுவலக விஷயங்களையே பேசுவதாலும் ,விடுமுறையில் இருந்தாலும் வேலை நாள் என்றே மனத்துக்கு தோன்றும் . கண்ணுக்கு எதிரே கம்ப்யூட்டர் இருக்காதே தவிர, பேச்சு, செயல் எண்ணம் என் எல்லாமே வேலையை சுற்றியே இருப்பதால் முழுமையான விடுமுறை என்று இதை சொல்லவே முடியாது .

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்
-----------------------------------------


SHARE Facebook Twitter

By சாரதி - May 31, 2018

எழுதியவர் : (14-Jan-19, 6:54 pm)
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே