பொங்கல் திரு நாள்

நம்முடம்பில் தேங்கிநிற்கும்
சில கொழுப்பு உடல் ஆரோகியத்தை
வெகுவாக பாதிக்கும் என்பர் வைத்தியர்
உடலில் காணும் தமோ, ரஜோ குணங்களும் கூட
கழிக்க கழிக்க நம்மை நம்முள் இறைமையை
காண வழிவகுக்கும், சத்துவகுணம் பெறுக
பழையன கழிதல், புதியனபுகுதல்
போகி நன்னாளில் பிரதி வருடம்
நாம் வீட்டில் பழையன எல்லாம் எரித்து
புதியன புகுத்தி பொங்கல் திருநாளில்
மங்கலமெல்லாம் பொங்கிவர , புதுப்
பானையில், புது நெல்லில் இருந்து நீக்கிய
அரிசியில், வெல்லம், புதுக்கரும்பு
நெய்யும் பாலும், தேங்காயும் சேர்த்து பொங்கல்
செய்து நமக்கு நல்வரவு தரும் கதிரவனுக்கு
படைக்கின்றோம் பின்பு அதை எல்லோரும்
பகிர்ந்துண்டு இன்புறுகிறோம், நம்முள்
சத்துவ குணம் பெறுக , தீய எண்ணங்கள்
தலைதூக்காது போக ................
பொங்கல் நன்னாள் தொடர்கிறது அதற்கடுத்த நாள்
மாட்டுப்பொங்கலாய், நம்மோடு நமக்காக உழைக்கும்
மாடுகளுக்கும் ஏற்றம் தந்து நாம் வாழவைக்க
உழவர்க்கு திருநாள் , நம் எல்லோருக்கும்
ஒன்றாய் வாழ கற்றுத்தரும் நன்னாள்
இப்பொங்கல் தமிழருக்கே ஓர் தனி நாள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jan-19, 7:04 pm)
Tanglish : pongal tru naal
பார்வை : 71

மேலே